ETV Bharat / state

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் வேகமாக பரவும் கரோனா… மத்திய அரசு எச்சரிக்கை

தமிழ்நாட்டில் சேலம், நீலகிரி, திருப்பூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் கரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் கரோனா பரிசோதனை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டுமென மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 16, 2023, 7:58 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் நான்கு மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் கரோனா பரிசோதனை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் அந்த கடிதத்தில், ''கடந்த சில மாதங்களில் கோவிட்- 19 தொற்றின் எண்ணிக்கை குறைந்திருந்தது. எனினும், கடந்த சில வாரங்களில், குறிப்பாக நாட்டின் சில பகுதிகளில் கரோனா தொற்று அதிகரித்துள்ளது. மார்ச் 8ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் தொற்றின் எண்ணிக்கை 2,082ஆகப் பதிவாகியுள்ளது. ஆனால், இது மார்ச் 15ஆம் தேதி முடிவடைந்த நிலையில் தொற்றின் எண்ணிக்கை 3,264ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இதுவரை நமது நாடு வெற்றி அடைந்த நிலையில், தொற்று நோயைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் ஆபத்து மதிப்பீடு அடிப்படையிலான அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டிய அவசியம் உள்ளது என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் வாராந்திர தொற்றின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. அதாவது, கடந்த மார்ச் 8ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத் தொற்று எண்ணிக்கை 170ல் இருந்தது. இது மார்ச் 15ஆம் தேதி முடிவடைந்த வாரத்தில் 258ஆக அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

மேலும், மார்ச் 15ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 1.99 விழுக்காடு நோய்ப் பரவல் விகிதத்தைப் பதிவு செய்துள்ளது. அதே காலகட்டத்தில் இந்தியாவின் நோய்த்தொற்று விகிதம் 0.61 விழுக்காடாக இருந்தது.

நுண்ணிய மட்டத்தில் (மாவட்டம் மற்றும் துணை மாவட்டங்கள்) கோவிட்- 19 நிலைமையை அரசு ஆய்வு செய்ய வேண்டும் மற்றும் கோவிட்-19 இன் பல்வேறு ஆலோசனைகளை திறம்பட கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். கரோனா தொற்றை தடுப்பதற்கான உடனடி தேவையான நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

மத்திய அரசு சில நெறிமுறைகளை தமிழ்நாடு அரசுக்கு வழங்கியுள்ளது. அதன்படி

• வழிகாட்டுதலின்படி போதுமான மற்றும் செயல்திறன் மிக்க சோதனை

• புதிய மற்றும் தொற்று அதிகமுள்ள பகுதிகளில் கரோனா தொற்று நோயாளிகளைக் கண்காணித்தல். அனைத்து சுகாதார வசதிகளிலும் அல்லது இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் முகாம்கள் மூலமாகவும் பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும். தொற்று பரவுவதை கண்டறிவதற்காக வழக்கமான அடிப்படையில் இன்ஃப்ளூயன்ஸா போன்ற நோய் (ILI) மற்றும் SARI வழக்குகளைக் கண்காணித்தல்

சர்வதேச பயணிகளின் பரிந்துரைக்கப்பட்ட மாதிரிகளுக்கான மரபணு வரிசைமுறை, தளங்களில் இருந்து மாதிரிகள் சேகரிப்பு (அடையாளம் காணப்பட்ட சுகாதார வசதிகள்)

• குறிப்பாக மூடப்பட்ட இடங்களில் மற்றும் நெரிசலான இடங்களில் அதிகரித்து வரும் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த எந்தப் பகுதியிலும் அரசு கடுமையான கண்காணிப்பைக் கடைப்பிடிப்பதும், தேவைப்பட்டால் முன்கூட்டியே நடவடிக்கை எடுப்பதும் அவசியம்.

"உங்களது தொடர்ச்சியான தலைமையின் கீழ், தொற்றுநோய் நிலைமையை கட்டுக்குள் வைத்திருக்க, இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தின் வேகத்தை எங்களால் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், மாநிலங்களுக்குத் தேவையான ஆதரவை தொடர்ந்தும், கூட்டு முயற்சிகளிலும் தொடர்ந்து வழங்கும்," என கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சேலம், நீலகிரி, திருப்பூர் மற்றும் திருச்சியில் கரோனா தொற்று அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலத்தை பொறுத்தவரை மார்ச் 2ஆம் தேதி முதல் மார்ச் 8ஆம் தேதி வரை தொற்றின் எண்ணிக்கை 16ஆக இருந்தது. ஆனால் மார்ச் 9ஆம் தேதி முதல் மார்ச் 15ஆம் தேதி வரை 30ஆக உயந்துள்ளது.

இதே போல நீலகிரியில் மார்ச் 2ஆம் தேதி முதல் மார்ச் 8ஆம் தேதி வரை தொற்றின் எண்ணிக்கை 6ஆக இருந்தது. இது மார்ச் 9ஆம் தேதி முதல் மார்ச் 15ஆம் தேதி வரை 12ஆக அதிகரித்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் மார்ச் 2ஆம் தேதி முதல் மார்ச் 8ஆம் தேதி வரை எண்ணிக்கை 6 ஆக இருந்த நிலையில் மார்ச் 9ஆம் தேதி முதல் மார்ச் 15ஆம் தேதி வரை 12 ஆக உயர்ந்துள்ளது. திருச்சியில் மார்ச் 2ஆம் தேதி முதல் மார்ச் 8ஆம் தேதி வரை தொற்றின் எண்ணிக்கை 7ஆக இருந்த நிலையில் மார்ச் 9ஆம் தேதி முதல் மார்ச் 15ஆம் தேதி வரை 11ஆக அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: பிளஸ் 2 தமிழ்த் தேர்வு எழுதாத மாணவர்கள்: கல்வியாளர்கள் குழு அமைத்து ஆராய கி.வீரமணி கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.