சென்னையில் அண்ணா நகர், கோடம்பாக்கம், அடையாறு போன்ற மண்டலங்களில் மட்டுமே கரோனா தொற்று பரவல் சற்று அதிகரித்து வருகிறது. இந்தப் பரவலை குறைப்பதற்கு அந்தப் பகுதி முழுவதும் அதிக மருத்துவ முகாம்கள் மற்றும் மக்களுக்கு தொடர்ந்து மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
சென்னையில் நேற்று ஒரே நாளில் 10 ஆயிரத்து 308 பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 356 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தப் புள்ளி விவரப்படி, கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் விகிதம் 3.4% உள்ளது.
இதுவரையிலும் சென்னையில் மொத்தம் 2 லட்சத்து 16 ஆயிரத்து 867 பேர் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 2 லட்சத்து 9 ஆயிரத்து 549 பேர் முழு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எஞ்சியுள்ள 3 ஆயிரத்து 451 பேரும் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும் 3 ஆயிரத்து 867 பேர் இந்த வைரஸ் தொற்றினால் உயிரிழந்தனர்.
மண்டல வாரியான சிகிச்சை பட்டியல்,
அடையாறு - 401 பேர்
கோடம்பாக்கம் - 364 பேர்
அண்ணா நகர் - 385 பேர்
ராயபுரம் - 205 பேர்
தேனாம்பேட்டை - 314 பேர்
தண்டையார்பேட்டை - 160 பேர்
திரு.வி.க. நகர் - 326 பேர்
வளசரவாக்கம் - 248 பேர்
அம்பத்தூர் - 300 பேர்
திருவொற்றியூர் - 82 பேர்
மாதவரம் - 155 பேர்
ஆலந்தூர் - 158 பேர்
சோழிங்கநல்லூர் - 90 பேர்
பெருங்குடி - 148 பேர்
மணலி - 55 பேர்