சென்னை: இதுதொடர்பாக மாநகராட்சி வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளில்,
* ஆசிரியர், பேராசிரியர்கள் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும்.
* கல்லூரி நிர்வாகம் மாணவர்கள் 100% தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.
* 12- 14, 15-18 வயதுக்குட்பட்ட சிறார்கள் தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்யும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரிகளின் நிர்வாகங்கள் சம்பந்தப்பட்ட மண்டல சுகாதார அலுவலர்கள் உடன் ஒருங்கிணைந்து தடுப்பூசி மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்கள் சுகாதாரத்துடன் இருக்க வேண்டும்.
* பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு சுகாதார பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
* பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித் துறை சார்பாக கல்வி நிறுவனங்களில் பின்பற்றப்பட வேண்டிய கோவிட் வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் கரோனா பாதிப்பு அதிகரிக்கும் சூழலில் சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் அதிகரிக்கும் கரோனா: கட்டுப்படுத்துவதில் மாநகராட்சி தீவிரம்