ETV Bharat / state

சென்னையில் வீடு வீடாகச் சென்று ஆய்வு - 5,218 பேருக்கு சிறு பாதிப்பு

சென்னை: மாநகராட்சியில் 5,218 பேருக்கு சளி, காய்ச்சல், இருமல் போன்ற சிறு பாதிப்புகள் உள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

corona-home-inspection
corona-home-inspection
author img

By

Published : Apr 17, 2020, 5:07 PM IST

தமிழ்நாட்டில் கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. மாநகராட்சியில் நேற்று வரை 217 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க சென்னை மாநகராட்சி சார்பில் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் சுகாதாரப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் இணைந்து வீடு வீடாகச் சென்று கரோனா தொற்றால் யாரும் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பது தொடர்பாக ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்தப் பகுதிகளில் தலா 100 வீடுகள் அடங்கிய ஒரு பகுதியாகப் பிரிக்கப்பட்டு மொத்தம் 12,203 பகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த வீடுகளை ஆய்வு செய்ய 10,566 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக இன்று சென்னை மாநகராட்சி சார்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இது வரையிலும் 5,218 பேருக்கு சளி, காய்ச்சல் போன்ற சிறு பாதிப்புகள் உள்ளன. இவர்களில் 4,575 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எஞ்சியுள்ள 643 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நிதியுதவி கோரி இசைக் கலைஞர்கள் வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.