மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று (ஏப்ரல்.12) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "தமிழ்நாட்டில் புதிதாக 82 ஆயிரத்து 202 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த 6,703 நபர்களுக்கும் ஓமனில் இருந்து தமிழ்நாடு திரும்பிய இரண்டு நபர்களுக்கும் அமெரிக்க அரபு நாடுகளில் இருந்து தமிழ்நாடு திரும்பிய ஒருவருக்கும் கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த மூன்று நபர்களுக்கும் ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த இரண்டு நபர்களுக்கும் என 6 ஆயிரத்து 711 நபர்களுக்கு புதிதாக வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 2 கோடியே 2 லட்சத்து 71 ஆயிரத்து 805 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் 9 லட்சத்து 40 ஆயிரத்து 145 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு இருந்தனர் என்பது கண்டறியப்பட்டது. இவர்களில் தற்போது மருத்துவமனை, தனிமைப்படுத்தும் மையங்களில் 46 ஆயிரத்து 308 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்து மேலும் 2,339 நபர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 80 ஆயிரத்து 910 ஆக உயர்ந்துள்ளது.
தனியார் மருத்துவமனையில் 11 நோயாளிகளும் அரசு மருத்துமனையில் 8 நோயாளிகள் என
மேலும் 19 நபர்கள் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 12,927 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் 17 ஆயிரத்து 98 நபர்களும், செங்கல்பட்டில் 4 ஆயிரத்து 85 நபர்களும், கோயம்புத்தூரில் 4 ஆயிரத்து 378 நபர்களும், திருவள்ளூரில் ஆயிரத்து 821 நபர்களும் என மாவட்டங்களில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மாவட்டம் வாரியாக பாதிப்பு விவரம்:
சென்னை - 2,67,181
கோயம்புத்தூர் - 63,808
செங்கல்பட்டு - 61,409
திருவள்ளூர் - 48,548
சேலம் - 34,621
காஞ்சிபுரம் - 32,230
கடலூர் - 26,729
மதுரை - 23,208
வேலூர் - 22,271
தஞ்சாவூர் - 21,285
திருவண்ணாமலை - 20,307
திருப்பூர் - 20,803
கன்னியாகுமரி - 18,139
தேனி - 17,578
விருதுநகர் - 17,224
தூத்துக்குடி - 17,238
ராணிப்பேட்டை - 17,029
திருநெல்வேலி - 17,023
திருச்சிராப்பள்ளி - 17,320
விழுப்புரம் - 15,999
ஈரோடு - 16,049
நாமக்கல் - 12,606
திருவாரூர் - 12,916
திண்டுக்கல் - 12,526
புதுக்கோட்டை - 12,209
கள்ளக்குறிச்சி - 11,184
நாகப்பட்டினம் - 10,301
தென்காசி - 9,087
நீலகிரி - 8,966
கிருஷ்ணகிரி - 9,275
திருப்பத்தூர் - 8,058
சிவகங்கை - 7,410
தருமபுரி - 7,156
ராமநாதபுரம் - 6,759
கரூர் - 5,912
அரியலூர் - 4,955
பெரம்பலூர் - 2,349
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 993
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,059
ரயில் மூலம் வந்தவர்கள் - 428