தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினந்தோறும் ஐந்தாயிரத்தைத் தாண்டுகிறது.
இந்நிலையில், இன்று தமிழ்நாட்டில் புதிதாக 5,516 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரேநாளில் 60 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழ்நாட்டிலுள்ள 175 பரிசோதனை மையங்களில் பரிசோதனை செய்யப்பட்டதில், தமிழ்நாட்டிலிருந்த 5,514 பேர், பிற மாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்து தமிழ்நாட்டிற்குத் திரும்பிய இரண்டு பேர் என மொத்தம் 5516 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஐந்து லட்சத்து 41 ஆயிரத்து 993ஆக அதிகரித்துள்ளது
தமிழ்நாட்டில் மொத்தமாக இதுவரை 64,74,656 நபர்களுக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் முகாம்களில் 46,703 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும், தொற்றிலிருந்து குணமடைந்து இன்று ஒரே நாளில் 5,206 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
இதனால், மாநிலத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,86,479ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் சிகிச்சைப் பலனின்றி இன்று ஒரே நாளில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,811ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் இன்றைய எண்ணிக்கை
சென்னை - 996
செங்கல்பட்டு -283
திருவள்ளூர் - 207
மதுரை- 86
காஞ்சிபுரம் - 156
விருதுநகர் - 47
தூத்துக்குடி - 82
திருவண்ணாமலை - 104
வேலூர் - 95
திருநெல்வேலி - 92
தேனி - 53
ராணிப்பேட்டை -42
கன்னியாகுமரி - 133
கோயம்புத்தூர் - 568
திருச்சிராப்பள்ளி- 92
கள்ளக்குறிச்சி - 55
விழுப்புரம் - 127
சேலம் - 291
ராமநாதபுரம் - 15
கடலூர்- 297
திண்டுக்கல் - 82
தஞ்சாவூர் - 162
சிவகங்கை - 61
தென்காசி - 87
புதுக்கோட்டை - 101
திருவாரூர் - 96
திருப்பத்தூர் - 68
அரியலூர் - 36
கிருஷ்ணகிரி -112
திருப்பூர் -169
தருமபுரி - 136
நீலகிரி - 130
ஈரோடு - 148
நாகப்பட்டினம் -103
நாமக்கல் -131
கரூர் -60
பெரம்பலூர் -11
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் -2