ETV Bharat / state

சென்னை மாநகரில் உள்ள பள்ளியில் கரோனா மையம் - ஆட்சியர் உத்தரவு - சென்னை ஆட்சியர் அதிரடி உத்தரவு

சென்னை: மக்கள் நெருக்கமான பகுதியிலிருந்து தனிமைப்படுத்துவதற்கு சென்னையில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளை மையங்கள் அமைப்பதற்கு தயார் நிலையில் இருக்குமாறு சென்னை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

corona
corona
author img

By

Published : May 1, 2020, 9:52 AM IST

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் 906 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. சென்னையில் குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களை வீடுகளில் தனிமைப்படுத்துவது என்பது இயலாத காரியம்.

கரோனா தீநுண்மி தொற்று அதிகளவில் பரவினால் பாதுகாப்பதற்காக ஏற்கனவே உயர் கல்வித் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கல்லூரிகளில் தனிமைப்படுத்துவதற்கான அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து அரசு, தனியார் பள்ளிகளிலும் தனிமைப்படுத்துவதற்கான மையங்களை அமைப்பதற்கு தயார் நிலையில் உள்ள பள்ளிகளின் பட்டியலை அளிக்க வேண்டுமென சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இதனையடுத்து, சென்னை ஆட்சியர் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "அரசு, தனியார் பள்ளிகளில் குடிநீர், கழிப்பறை, கட்டடத்தின் உறுதித்தன்மை, வாகனங்கள் நிறுத்தும் வசதி, சுகாதார வசதிகள் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். பேரிடர் மேலாண்மை முகாம்கள் பள்ளிகளில் இயக்க தயார் நிலையில் இருப்பதையும் உறுதிசெய்ய வேண்டும்" என அறிவுறுத்தியுள்ளார்.

ஏற்கனவே மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் பணிபுரிபவர்கள், சுற்றுலாப் பயணிகள், படிக்கும் மாணவர்கள் உள்ளிட்டவர்கள் தமிழ்நாடு அழைத்து வருவதற்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் முதன்மைச் செயலர் அதுல்யா மிஸ்ரா ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாடுகள், வெளிமாநிலங்களிலிருந்து அழைத்துவரப்படும் அனைவரும் 28 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டு அதன்பின்னரே வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

இந்தச் சூழ்நிலையை கருத்தில்கொண்டு சென்னை மாநகராட்சி அதிக அளவில் தனிமைப்படுத்தும் இடங்களை தயார் செய்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: புதுவையில் 13 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.