சென்னையில் நாளுக்கு நாள் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. கோடம்பாக்கம், அண்ணா நகர் உள்ளிட்ட சில மண்டலங்களில் மட்டும் தொற்றுப் பரவல் சற்று அதிகரிப்பதாகத் தெரிகிறது. அவற்றைக் குறைக்க அந்தந்த மண்டலத்தில் அதிக மருத்துவ முகாம்களும், விழிப்புணர்வும், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடத்தப்படுகின்றன.
சில நாள்களுக்கு முன்பு மாநகராட்சியில் கரோனா பரவல் 3 விழுக்காடாக இருந்த நிலையில் தற்போது அது 1.5 விழுக்காட்டிற்கும் கீழ் குறைந்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி மண்டலவாரியாக சிகிச்சைப் பெற்று வருபவர்களின் விவரங்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதன்படி,
- அண்ணா நகர் - 158
- கோடம்பாக்கம் - 168
- தேனாம்பேட்டை - 156
- ராயபுரம் - 84
- தண்டையார்பேட்டை - 55
- திரு.வி.க. நகர் - 120
- அடையாறு - 147
- வளசரவாக்கம் - 148
- அம்பத்தூர் - 130
- திருவொற்றியூர் - 44
- மாதவரம் - 49
- ஆலந்தூர் - 118
- சோழிங்கநல்லூர் - 66
- பெருங்குடி - 82
- மணலி - 29 பேர்
சென்னையில் இதுவரை மொத்தம் 2 லட்சத்து 32 ஆயிரத்து 13 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 2 லட்சத்து 26 ஆயிரத்து 325 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
எஞ்சியுள்ள ஆயிரத்து 575 பேரும் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். மேலும், 4ஆயிரத்து 113 பேர் இந்த கரோனா தொற்றினால் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் திருச்சி ஆட்சியர் சிவராசு