தமிழ்நாட்டில் இன்று (பிப்.16) புதிதாக மேலும் 451 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் புதிதாக 50 ஆயிரத்து 643 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம், தமிழ்நாட்டில் இருந்த 451 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதுவரை ஒரு கோடியே 65 லட்சத்து 49 ஆயிரத்து 794 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.இதன் மூலம், 8 லட்சத்து 46 ஆயிரத்து 26 நபர்கள் வைரஸ் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 4 ஆயிரத்து 206 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளில் குணமடைந்த மேலும் 470 பேர் இன்று வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், குணமடைந்தவரின் எண்ணிக்கை 8 லட்சத்து 29 ஆயிரத்து 388 என உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் சிகிச்சை பலனின்றி தனியார் மருத்துவமனையில் 4 நோயாளிகளும், அரசு மருத்துமனையில் மூன்று நோயாளிகளும் என மேலும் 7 பேர் இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 432 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு
சென்னை - 2,33 619
கோயம்புத்தூர் - 55 240
செங்கல்பட்டு - 52177
திருவள்ளூர் - 43918
சேலம் - 32599
காஞ்சிபுரம் - 29,410
கடலூர் - 25,083
மதுரை - 21,166
வேலூர் - 20893
திருவண்ணாமலை - 19434
தேனி - 17136
தஞ்சாவூர் - 17923
திருப்பூர் - 18174
விருதுநகர் - 16625
கன்னியாகுமரி - 16986
தூத்துக்குடி - 16326
ராணிப்பேட்டை - 16192
திருநெல்வேலி - 15678
விழுப்புரம் - 15237
திருச்சிராப்பள்ளி - 14883
ஈரோடு - 14,639
புதுக்கோட்டை - 11621
கள்ளக்குறிச்சி - 10903
திருவாரூர் - 11289
நாமக்கல் - 11749
திண்டுக்கல் - 11,380
தென்காசி - 8493
நாகப்பட்டினம் - 8553
நீலகிரி - 8285
கிருஷ்ணகிரி - 8122
திருப்பத்தூர் - 7616
சிவகங்கை - 6721
ராமநாதபுரம் - 6442
தருமபுரி - 6631
கரூர் - 5474
அரியலூர் - 4716
பெரம்பலூர் - 2279
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் 946
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் 1040
ரயில் மூலம் வந்தவர்கள் 428
இதையும் படிங்க: யுபிஎஸ்சி ஆர்வலர்களுக்கு 'ஸ்மார்ட் டெஸ்ட் சீரிஸ்' - ஐஐடி மெட்ராஸின் புதிய முயற்சி!