இதுகுறித்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 807 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் ஆயிரத்து 219 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 88 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 2 ஆயிரத்து 403ஆக உள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் கரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 65 ஆயிரத்து 714ஆகவும், சென்னையில் 84ஆயிரத்து 598ஆகவும் அதிகரித்துள்ளது. மேலும் 3 ஆயிரத்து 49 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். மொத்தமாக இதுவரை 1 லட்சத்து 13 ஆயிரத்து 856 பேர் குணமடைந்துள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திட்டக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருக்கு கரோனா