சென்னையில் கரோனா வைரஸ் கட்டுப்படுத்தவும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சென்னை மாநகராட்சி தனியார் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் சேவாபாரதி தமிழ்நாடு அமைப்பு சென்னை மாநகராட்சியுடன் இணைந்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி சைதாப்பேட்டையில் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தமிழ் கலைகளான சிலம்பாட்டம் உள்ளிட்ட பல கலைகள் மூலம் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் நிகழ்ச்சிக்கு பிறகு தன்னார்வ அமைப்பு பேரணியாக சென்று கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பின்னர் சேவா பாரதி தமிழ்நாடு அமைப்பின் திட்ட இயக்குநர் சிவக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில் "மாநகராட்சியுடன் இணைந்து பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். தமிழ்நாடு அரசு தளர்வு அறிவித்ததற்கு பிறகு அதிக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த நிகழ்ச்சி மற்றும் இசை பேரணி நடைபெற்றது. சைதாப்பேட்டை வாழையடி தோப்பு பகுதியை சார்ந்த 13 ஆயிரம் மக்களிடம் சென்று எங்கள் அமைப்பு சார்ந்த களப்பணியாளர்கள் தினமும் நலன் விசாரித்து கணக்கெடுத்து வருகின்றனர். இந்த சேவை செய்வதற்கு சேவாபாரதி மிகவும் மகிழ்ச்சி அடைகிறது" என்றார்.
இதையும் படிங்க: ஆட்டோவில் கஞ்சா பறிமுதல்: போலீசிடம் சிக்காமல் கூவத்தில் குதித்த ஓட்டுநர்!