ETV Bharat / state

கூவம் கரைவாழ் மக்கள் போராட்டம்! - சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை: எஸ்எம் நகரில் அப்புறப்படுத்தும் பணியின்போது வீடுகளை இடிக்க விடாமல் 10க்கும் மேற்பட்டோர் கூவத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கூவம் கரைவாழ் மக்கள் போராட்டம்
கூவம் கரைவாழ் மக்கள் போராட்டம்
author img

By

Published : Dec 9, 2020, 5:44 PM IST

சென்னை அண்ணா சாலை தீவுத்திடல் எதிரே உள்ள எஸ்எம் நகர், காந்தி நகர் ஆகிய இடங்களில் சுமார் மூன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் கூவம் அருகே வசிக்கும் பொதுமக்கள் அப்புறப்படுத்தக் கோரி மாநகராட்சி அலுவலர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கூவம் கரைவாழ் மக்கள் போராட்டம்

அதன்படி இன்று (டிச.9) மாநகராட்சி அலுவலர்கள் முதற்கட்டமாக எஸ்எம் நகரில் 400 வீடுகளை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது வீடுகளை இடிக்க விடாமல் 10க்கும் மேற்பட்டோர் கூவத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அங்கு 100க்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டனர்.

பின்னர் அவர்கள் விடுகளை இடிக்க விடாமல் போராட்டம் நடத்திய 50க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

அப்பகுதி மக்களை பெரும்பாக்கம் பகுதிக்கு அனுப்பி வைக்கப்படுவதாக நகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.

இருப்பினும் எஸ்எம் நகர் அருகே மாற்று இடம் ஏற்பாடு செய்து தருமாறு நகராட்சி அலுவலர்களிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து நாளை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம்- விக்கிரமராஜா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.