ETV Bharat / state

பேரணிக்கு அனுமதிக்கு வழங்காததால் காவல்துறைக்கு எதிராக ஆர்எஸ்எஸ் சார்பில் அவமதிப்பு வழக்கு! - chennai news

RSS Rally issue: நீதிமன்றம் உத்தரவிட்டும் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்காத காவல்துறைக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 30, 2023, 10:02 PM IST

சென்னை: நாட்டின் 76வது சுதந்தர தினம், விஜய தசமி மற்றும் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அக்டோபர் 22 மற்றும் 29ஆம் தேதிகளில் தமிழ்நாட்டின் 33 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ். சார்பில் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலங்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கும்படி அக்டோபர் 16ஆம் தேதி தமிழ்நாடு காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் நீதிமன்றம் உத்தரவிட்டும் ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதிக்கவில்லை என்பதால், காவல்துறை மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளதாக வழக்கறிஞர் பிரபு மனோகர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.

இந்த அவமதிப்பு வழக்கை அவசர வழக்காக இன்றே விசாரிக்க வேண்டுமெனவும், நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு கோரிக்கை விடுத்தார். ஆனால் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, ஊர்வலம் நடத்த அனுமதி கோரிய தேதிகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், அவசர வழக்காக விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறியுள்ளார். மேலும் மனுத் தாக்கல் நடைமுறைகள் முடிந்த பின்னர் விசாரணைக்கு பட்டியலிட்ட பின்னர் விசாரிக்கப்படும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பயணிகளின் கவனத்திற்கு.. சென்னையில் நாளை கடற்கரை - தாம்பரம் இடையே மின்சார ரயில் சேவை ரத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.