கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு சென்னையின் வடபகுதியில் குறைய தொடங்கிய நிலையில், தற்போது மத்திய பகுதியான அண்ணா நகர், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை போன்ற பகுதிகளில் வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மாநகராட்சி , சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.
கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஒரு தெருவில் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டால் அந்த முழு தெருவும் தனிமைப்படுத்தப்பட்டு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. அது மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது. இதன்காரணமாக ஒரு தெருவில் 3 முதல் 5 நபர்களுக்கு கரோனா ஏற்பட்டால் மட்டுமே அந்த முழு தெருவையும் தனிமைப்படுத்தி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக தற்போது மாநகராட்சி நிர்வாகம் அறிவித்து வருகிறது.
சிறிது நாட்களுக்கு முன்பு நோய் தொற்று அதிகரித்ததால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அதிகரித்துக்கொண்டே சென்றது. மாநகராட்சி நிர்வாகம் எடுத்துவந்த தொடர் நடவடிக்கையால் 18ஆக இருந்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதி தற்போது 12ஆக குறைந்துள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வெளியிலிருந்து யாரும் உள்ளே செல்லக்கூடாது, உள்ளே இருப்பவர்கள் யாரும் வெளியே வர அனுமதியில்லை.
இதன் மண்டல வாரியான பட்டியலை மாநகராட்சி தற்போது அறிவித்துள்ளது. அதன்படி,
மணலி - 3
தண்டையார்பேட்டை - 1
ராயபுரம் - 3
அண்ணாநகர் - 1
தேனாம்பேட்டை - 2
அடையாறு - 1
சோழிங்கநல்லூர் - 1
இந்த 12 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தேவையான வசதிகளை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தன்னார்வலர்கள் செய்து வருகின்றனர்