ETV Bharat / state

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் - புதிய சட்டத்தால் நம் பிரச்னைகளைத் தீர்க்க முடியுமா? - Consumer awareness

1986ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி மத்திய அரசு நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை உருவாக்கியது. இந்த நாள் நாடு முழுவதும் தேசிய நுகர்வோர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

Consumer
Consumer
author img

By

Published : Jan 2, 2020, 9:43 PM IST

பொருளாதார தாராளமயமாக்கல், உலகமயமாக்கலுக்கு பிறகு நுகர்வோர் ஒரு முக்கியமான மரியாதைக்குரிய நபராக மாறிவிட்டனர். உற்பத்தி செய்யப்படும் தயாரிப்புகள் அதிகளவில் கொள்முதல் நடைபெற்று வருவதால், மோசடிகள் இழப்புக்கு எதிராக, அவர்கள் எச்சரிக்கை செய்யப்பட வேண்டும். நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால், அந்தந்த நுகர்வோரின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதும் முக்கியம்.

நுகர்வோருக்கு விழிப்புணர்வு இல்லை

இன்று பெரும்பாலான நுகர்வோர், தங்களது உரிமைகள் குறித்து சரியான புரிதலைக் கொண்டிருக்கவில்லை; அதன் விளைவாக அவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். குறிப்பாக, இது கிராமப்புறங்களில் உள்ள நுகர்வோருக்கு பொருந்தும். கடந்த ஆண்டு, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986இல் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான புதிய மசோதாவை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த மசோதாவில், 2019 ஆகஸ்ட் 9 அன்று குடியரசுத் தலைவர் கையெழுத்திட்டார்.

நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாத்தல், நெறிமுறையற்ற வணிகங்களை கட்டுப்படுத்துதல், குறை தீர்க்கும் முறையை வேகப்படுத்துதல், இ - காமர்ஸ் பரிவர்த்தனைகள் ஆகியன, இதில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த சட்டம் நுகர்வோரை மேலும் பலம் பொருந்தி மேம்படுத்துவதில் ஒரு ’மைல்கல்’ எனலாம். அமெரிக்காவின் ‘அமெரிக்க கூட்டமைப்பு வர்த்தக ஆணையம்’ மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள ‘ஆஸ்திரேலிய நுகர்வோர் ஆணையம்’ ஆகியவை நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

Consumer
நுகர்வோர்

நுகர்வோருக்கான தளங்களை மாற்றியமைக்கும் வகையில் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும், சட்டவிரோத வணிகங்களைத் தடுப்பதற்காகவும், இச்சட்டத்தின் கீழ் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்பட்டது.

உரிமை மீறப்பட்டால் புகார் அளிக்கலாம்

ஒழுக்கக்கேடான வர்த்தகம் நடைபெறுவதாகவோ, உரிமைகள் மீறப்படுவதாகவோ புகார் எழுந்தால், மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை பெறலாம். புதிய சட்டம், நுகர்வோர் ஆணையங்களின் வரம்புகளையும் பரிந்துரைத்துள்ளது. மாவட்ட அளவில் ஆணையம், ரூ.1 கோடி மதிப்பிலான வழக்குகளை எடுத்துக்கொள்ளலாம். தேசிய ஆணையம் ரூ.1 கோடி முதல் ரூ. 10 கோடி மதிப்பிலான வழக்குகளை எடுத்துக்கொள்கிறது. மாவட்ட அளவிலான ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து, மாநில ஆணையத்திலும் அதன் பிறகு தேசிய ஆணையத்திலும் முறையிடலாம். அதேபோல், தனது தீர்ப்புகளை மறுஆய்வு செய்ய, ரத்து செய்ய மாநில ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது. இதன் காரணமாக - தீர்ப்பில் திருத்தம் கோரும் சூழ்நிலை இருந்தால், அவற்றை விரைவாக சரிசெய்ய முடியும்.

கடுமையான அபராதம்

இதன் விதிமுறைகளையும், ஒழுங்கு விதிகளையும் மீறுபவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது. நம்பத்தகாத அறிவிப்புகள் அல்லது விளம்பரங்கள் மூலம் நுகர்வோர் தவறாக வழிநடத்தப்பட்டால், சம்பந்தப்பட்ட விற்பனையாளருக்கு ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். இதுபோன்ற மோசடியான அறிவிப்புகள், விளம்பரங்களில் ஈடுபடும் பிரபலங்கள், பிற விளம்பரங்களில் பங்கேற்க தடை விதிக்கப்படுவார்கள். பொருட்களின் தரத்தால் எந்தவொரு தீங்கும் ஏற்பட்டால், ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனையும், ரூ.1 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும். உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டவாறு செயல்படுத்தப் படாவிட்டால், ஆறு மாதங்கள் வரை சிறை தண்டனையும், ரூ. 20 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும். நுகர்வோர் நலன்களுக்கு எதிராக செயல்பட்டதற்காக உற்பத்தியாளர் மற்றும் சேவை வழங்குவோருக்கும் சிறை தண்டணையும், அபராதமும் விதிக்கப்படும்.

Consumer
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்

புதிய நடுவர் மன்றங்கள் அமைப்பு

பிரச்னைகள், விவகாரங்களை தீர்க்க புதிய நடுவர் மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பயனாளிகள் தங்கள் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு பெறவேண்டும் என்ற நோக்கத்துடன் இவை அமைக்கப்பட்டுள்ளன. நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் தீர்வு கிடைக்காவிட்டால், மாவட்ட அளவிலான ஆணையம் மாநில, தேசிய ஆணையங்களை அணுகலாம். புதிய சட்டத்தின் கீழ், நுகர்வோர் தங்கள் பிரச்னை குறித்து ஆன்லைன் மூலம் எங்கிருந்தும் புகார் செய்யலாம். மொத்தத்தில், இந்த சட்டம் நுகர்வோருக்கு பயனளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

4 மணி நேர காத்திருப்பிற்கு 35 ஆயிரம் அபராதம்

வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால், இழப்பீடு நுகர்வோருக்கு செலுத்தப்படும். ’லலித் குமார் வெர்சஸ் கிருஷ்ணா’ வழக்கில் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. இதில், இழப்பீடு ரூ. 35,000 நுகர்வோருக்கு செலுத்த உத்தரவிடப்பட்டது; இதில், ஒப்புக்கொள்ளப்பட்டதைவிட நுகர்வோர் 4 மணி நேரம் காத்திருக்க வைக்கப்பட்டார் என்பதுதான் குற்றச்சாட்டு.

விளம்பரங்களுக்கு தேவை கட்டுப்பாடு

நுகர்வோர் வழக்குகள் தீர்வு செயல்முறை, உரிய கால வரம்புக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். இது, தயாரிப்பாளருக்கும் விற்பனையாளருக்கும் பொறுப்புடன் செயல்பட உதவும். இளம் குழந்தைகளுக்கான தீங்கு விளைவிக்கும் உணவுப் பொருட்களின் விளம்பரத்தில் தெளிவான கட்டுப்பாடு இருக்கவேண்டும் என்ற கருத்தும் உள்ளது.

Consumer Protection
Consumer Protection ACT

நுகர்வோர் விழிப்புணர்வு மாநாடு, கூட்டங்களை அரசு நிதியளிக்கும் நிறுவனங்கள், குறிப்பாக பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் நடத்தவேண்டும். சந்தையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் தரத்தை சோதனை செய்ய அரசால் ஆய்வகங்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது. குறிப்பிட்ட அளவுகோல்களை பூர்த்தி செய்த பிறகே, தயாரிப்புகளை சந்தையில் வெளியிடுவது என்பது, வாடிக்கையாளர்களுக்கு நன்மை பயக்கும்.

நுகர்வோருக்கு சாதகமான சட்டம்

அரசின் நேர்மை மற்றும் சட்ட அமலாக்கத்திற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றில், நுகர்வோரின் பங்களிப்பு முக்கியமானது. மொத்தத்தில், நுகர்வோர் உரிமைகள் தொடர்பாக அரசின் புதிய சட்டம் சாதகமாக உள்ளது. தமது புகார்கள் தீர்க்கப்பட்டு பொருத்தமான இழப்பீடு பெறப்படும்போது மட்டுமே, நுகர்வோர் திருப்தி அடைவர். எந்தவொரு சட்டமும், சரியாக செயல்படுத்தப்பட்டால் மட்டுமே மக்களுக்கு அது பயனுள்ளதாக இருக்கும்.

இதையும் படிங்க: நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்..!

Intro:Body:

Consumer to be put on the highest pedestal

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.