சென்னை: தலைமைச் செயலாளர் தலைமையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளீல் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப்பணிகள், மழைநீர் வடிகால் பணிகள், கழிவுநீர் அகற்றும் பணிகள் குறித்து இன்று(அக்.20) ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
மேலாண்மை குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், 2,624 கி.மீ. நீளத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளில், கடந்த 2 ஆண்டுகளில் 685.68 கி.மீ. நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் முடிவு பெற்றுள்ளன. நடப்பாண்டில் 170.65 கி.மீ. நீளத்தில் மழைநீர் வடிகால் பணிகள் அமைக்கப்பட்டுள்ளது என்று பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
-
தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப்பணிகளின் நிலை குறித்தும், சாலை வெட்டுக்களை சீரமைக்கும் பணிகள், சாலைபோக்குவரத்து நெரிசல் மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது#CMMKSTALIN #TNDIPR@mkstalin pic.twitter.com/E5jR5s9mqs
— TN DIPR (@TNDIPRNEWS) October 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப்பணிகளின் நிலை குறித்தும், சாலை வெட்டுக்களை சீரமைக்கும் பணிகள், சாலைபோக்குவரத்து நெரிசல் மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது#CMMKSTALIN #TNDIPR@mkstalin pic.twitter.com/E5jR5s9mqs
— TN DIPR (@TNDIPRNEWS) October 20, 2023தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப்பணிகளின் நிலை குறித்தும், சாலை வெட்டுக்களை சீரமைக்கும் பணிகள், சாலைபோக்குவரத்து நெரிசல் மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது#CMMKSTALIN #TNDIPR@mkstalin pic.twitter.com/E5jR5s9mqs
— TN DIPR (@TNDIPRNEWS) October 20, 2023
இது குறித்து சென்னை மாநகராட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், "பெருநகர சென்னை மாநகராட்சியில் 388 கி.மீ. நீளத்திற்கு 471 பேருந்து தட சாலைகள், 5 ஆயிரத்து 270 கி.மீ. நீளத்திற்கு, 34 ஆயிரத்து 640 உட்புறச் சாலைகள் என மொத்தம் 5 ஆயிரத்து 658 கி.மீ. நீளத்தில் 35 ஆயிரத்து 111 சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இவற்றில் 5 ஆயிரத்து 509 எண்ணிக்கையிலான சாலைப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
ஆயிரத்து 934 சாலைகளில், ஆயிரத்து 670 சாலைப் பணிகள் முடிக்கப்பட்டு, 255 சாலைகளில் பணிகள் நடைபெற்று வருகிறது. மீதமுள்ள 9 சாலைகளில் நிரந்தர சாலைகள் அமைக்கும் பணி வரும் வாரத்தில் மேற்கொள்ளப்படும். தற்காலிகமாக சாலை அமைக்க ஒப்படைக்கப்பட்டுள்ள 527 சாலைகளில் 294 சாலைப் பணிகள் முடிவு பெற்று, 211 சாலைப் பணிகள் நடைபெற்று வருகிறது.
மீதமுள்ள 22 சாலைப் பணிகள், வரும் வாரத்தில் மேற்கொள்ளப்படும். வெள்ள மேலாண்மை குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், 2 ஆயிரத்து 624 கி.மீ. நீளத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளில், கடந்த 2 ஆண்டுகளில் 685.68 கி.மீ. நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் முடிவு பெற்றுள்ளன. நடப்பாண்டில் இது 170.65 கி.மீ. நீளத்தில் மழைநீர் வடிகால் பணிகள் அமைக்கப்பட்டுள்ளன.
பெருநகர சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் 16 கால்வாய்களில் ஆகாயத்தாமரைகள் மற்றும் வண்டல்கள் அகற்றும் பணி 19 ஆயிரத்து 405 மீட்டர் நீளத்தில் முடிவடைந்துள்ளது. தொடர்ந்து 10 ஆயிரத்து 385 மீட்டர் நீளத்தில் கழிவுகளை அகற்றும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுப்பணித்துறையின் சார்பிலும் நீர்நிலைகளில் கழிவுகள் அகற்றும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது.
ஆணையர் ஆய்வு: இதைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட திரு.வி.க.நகர், ஆலந்தூர் மற்றும் பெருங்குடி மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால், சாலை மற்றும் சீரமைப்புப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், இன்று (அக்.20) பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து சாலைகளில் நீண்டகாலமாக கேட்பாரற்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை அகற்றிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: சென்னை கொளத்தூரில் ரூ.3.84 கோடியில் விளையாட்டு திடல்: முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்