ETV Bharat / state

கொரோனா தடுப்பு குறித்து வெளிநாட்டு தூதர்களுடன் ஆலோசனை

author img

By

Published : Mar 12, 2020, 10:20 PM IST

சென்னை: வெளிநாட்டு தூதர்கள் மற்றும் தூதரக அலுவலர்களுடன் கொரோனா வைரஸ் நோய் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ், பொதுத்துறை செயலாளர் செந்தில்குமார், அமெரிக்கா, லண்டன், ரஷ்யா, ஸ்ரீலங்கா உள்ளிட்ட நாடுகளின் தூதர்கள் மற்றும் தூதரக அலுவலர்களும் கலந்துகொண்டனர்.

இதில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கை குறித்து சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் விளக்கமாக எடுத்துரைத்தார். சீனா, இத்தாலி, ஈரான், கொரியா, பிரான்ஸ் உள்ளிட்ட 12 நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வரும் இந்தியர்கள் உட்பட அனைவரும் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள். தேவைப்படும் பட்சத்தில் 28 நாட்கள் வரை அது நீட்டிக்கப்படும் என்பதை விளக்கினார்.

பின்னர், அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கொரோனா வைரஸ் நோய் தொடர்பாக எடுக்க வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மாநில எல்லைகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மதுரை மற்றும் சென்னை தாம்பரம் பகுதிகளில் இதற்கென தனி மருத்துவமனை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கொரோனா வைரஸ் நோய் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளிலிருந்து வரும் அனைவரும் பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். அண்டை மாநிலங்களிலும் நோய் தொற்று உள்ளதால் ரயில்கள் மற்றும் பேருந்துகளில் வருபவர்களும் கண்காணிக்கப்படுவார்கள். பொதுமக்கள் தங்கள் கைகளை சுத்தமாக கழுவி தூய்மையைக் கடைபிடிக்க வேண்டும்.

ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்வதற்கான மையங்கள் தற்போது போதுமான அளவில் உள்ளன. அது போன்ற நிலை தமிழ்நாட்டில் தற்போது வரவில்லை. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஒருவரும் அவருக்கான ரத்த மாதிரி பரிசோதனை அறிக்கை வந்தவுடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: மழையின் காரணமாக கைவிடப்பட்ட இந்தியா - தென் ஆப்பிரிக்கா போட்டி!

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.