தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டபேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வேட்புமனு தாக்கல் இன்னும் ஓரிரு நாள்களில் தொடங்கவுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக ஆகியவை தங்கள் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்குத் தொகுதிகளை இறுதிசெய்வதிலும், வேட்பாளர்களைத் தேர்வுசெய்வதிலும் தீவிரம் காட்டிவருகின்றன.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவிற்கு 23 தொகுதிகளும், பாஜகவிற்கு 20 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பாமக, பாஜக போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை இன்று (மார்ச் 10) மாலை அதிமுக வெளியிட்டுள்ளது.
பாஜக போட்டியிடும் தொகுதிகள் பட்டியல்
- திருவண்ணாமலை
- நாகர்கோவில்
- குளச்சல்
- விளவன்கோடு
- ராமநாதபுரம்
- மொடக்குறிச்சி
- துறைமுகம்
- ஆயிரம்விளக்கு
- திருக்கோவிலூர்
- திட்டக்குடி (தனி)
- கோயம்புத்தூர் (தெற்கு)
- விருதுநகர்
- அரவக்குறிச்சி
- திருவையாறு
- உதகமண்டலம்
- திருநெல்வேலி
- தளி
- காரைக்குடி
- தாராபுரம் (தனி)
- மதுரை (வடக்கு)
இதையும் படிங்க:கூட்டணியிலிருந்து வெளியேறிய தேமுதிக: அடுத்தது என்ன?