இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், “போக்குவரத்து ஊழியர்களின் பிரச்னைகள் குறித்து அந்த துறைக்கான அமைச்சர் பதில் அளிக்க வேண்டும். அதில், தீர்வு கிடைக்கவில்லை என்றால் முதலமைச்சர் தலையிட்டு அவர்களது கோரிக்கைகளுக்கு பதில் அளிக்கவேண்டும்.
போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். பொதுமக்களின் நலனை கருத்தில்கொண்டு போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு முதலமைச்சர் தீர்வுகாண வேண்டும்” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாத பாஜக, சட்டப்பேரவை உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்து ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறது.
பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், ஆளும் அரசை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபடுவது ஜனநாயகத்திற்கு விரோதமான செயல். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை, சில சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்டு கவிழ்க்க நினைப்பது ஜனநாயக படுகொலை” என்று காட்டமாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரஜினி - திருநாவுக்கரசர் சந்திப்பு குறித்து அவர்களுக்கு மட்டுமே தெரியும் - தொல்.திருமாவளவன்