ETV Bharat / state

எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துவது தான் மத்திய அரசின் நோக்கம்: திருநாவுக்கரசர்

author img

By

Published : Jan 10, 2020, 12:27 PM IST

சென்னை: எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துவது தான் மத்திய அரசின் நோக்கம் என்று காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் விமர்சித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர்

இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, லாபத்தில் இருக்கும் மத்திய அரசின் நிறுவனங்கள் அனைத்தையும் விற்கும் செயலில் ஆட்சியாளர்கள் ஈடுபட்டுவருவது கண்டனத்துக்குரியது.

சமீபகாலமாக சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்கெட்டு வருகிறது. பயங்கரவாதிகள் ஊடுருவல் இருப்பதாகத் தகவல் தெரிவதால், மாநிலம் முழுவதும் காவல்துறையினரை தீவிர கண்காணிப்பில் ஈடுபட செய்வதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர்

உள்ளாட்சித் தேர்தல் வெறும் 35 விழுக்காட்டுக்கு மட்டும் தான் நடந்திருக்கிறது. மீதமுள்ள 65 விழுக்காடு தேர்தலை உடனடியாக நடத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இசட் பிரிவு பாதுகாப்பை திரும்பப் பெற்றது கண்டனத்துக்குரியது. இது பழிவாங்கும் நோக்கமாகும். எதிர்க்கட்சித் தலைவர்களை தொடர்ந்து அச்சுறுத்துவது தான் மத்திய அரசின் நோக்கமாக உள்ளது, என்றார்.

இதையும் படிங்க: ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏவின் வாகனத்தை சுற்றி வளைத்த அமராவதி விவசாயிகள்!

Intro:திருச்சி செல்லும் முன் சென்னை விமானநிலையத்தில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் பேட்டி

Body:திருச்சி செல்லும் முன் சென்னை விமானநிலையத்தில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் பேட்டி

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.