ETV Bharat / state

'நாடகங்களின் சீன் அதிகமாக உள்ளது' - ஆர்பாட்டத்தை விமர்சித்த மாணிக்கம் தாக்கூர் - கரூர் எம்பி ஜோதிமணி

தமிழ்நாடு காங்கிரஸ் அலுவலகத்தில் எம்பி விஷ்ணு பிரசாத்தும் அவரது ஆதரவாளர்களும் நடத்திவரும் போராட்டத்தை விமர்சித்து காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர் கருத்து தெரிவித்துள்ளார்.

Congress MP Manikkam Thakur commented on MP Vishnu Prasad and his supporters protest

author img

By

Published : Mar 13, 2021, 7:02 PM IST

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் எம்பி விஷ்ணு பிரசாத் தனது ஆதரவாளர்களுடன் இன்று காலை முதல் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகிறார். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வதில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்று வருவதாகவும், பணம் உள்ளவர்களுக்கு மட்டும் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது என்றும் அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

இவர்களது ஆர்பாட்டத்தை விமர்சித்துள்ள காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர், "உட்கட்சி விவகாரங்களை பொதுவெளியில் பேசி எதிர்கட்சிகள் எளிதில் வெற்றிபெற, முயற்சிக்கின்றனர்" என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "சோனியாகாந்தி தலைமையில் நடக்கும் மத்திய தேர்தல் குழுவில் எடுக்கும் முடிவு ஒவ்வொரு உண்மையான காங்கிரஸ் தொண்டனுக்கும் நியாயமான முடிவாக கிடைக்கும். ஆனால் சிலர் விளம்பரதிற்காக காங்கிரஸ் இயக்கதிற்கு மிக பெரிய இழிவை ஏற்படுத்தி எதிரிகளுக்கு உதவுகின்றனர். இதுபோன்ற துரோகிகளை கண்டுகொள்ளுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அதில், "கட்சிக்காக உழைத்த முன்னாள் மாவட்டத்தலைவருக்கு அதுவும் சில நூறு ஓட்டில் தோல்வியடைந்தவருக்கு மீண்டும் தொகுதியை வழங்கக்கூடாது என சண்டையிட்டு தடுத்தவர்கள் இன்று நியாயம் பேசலாமா?

  • அன்னை சோனியாகாந்தி அவர்கள் தலைமையில் நடக்கும் மத்திய தேர்தல் குழு வில் எடுக்கும் முடிவு ஒவ்வொரு உண்மையான காங்கிர்ஸ் தொண்டனுக்கும் நியாமான முடிவாககிடைக்கும் ஆன சிலர் விளம்பரதிற்காக காங்கிரஸ் இயக்கதிற்கு மிக பெரிய இழிவை ஏற்படுத்தி எதிரிகளுக்கு உதவும் துரோகிகளை கண்டுகொள்ளுங்கள்

    — Manickam Tagore .B🇮🇳✋மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) March 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

தன் தந்தையால் எம்எல்ஏ, எம்பி ஆன இவர் இப்போது தொண்டர்களை ஏமாற்றலாமா? அல்லது பாஜக- அதிமுக கூட்டணிக்கு உதவ இந்த குழப்பமா? நான் உட்கட்சி விவகாரத்தை பொது வழியில் இந்த நாள்வரை பேசியதில்லை. ஆனால் இன்று நாடாகங்களின் சீன் அதிகமாக இருப்பதால் உண்மையின் சில துளிகளைக் கூறுகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக ஆர்பாட்டத்தில் ஈடுபடும் காங்கிரஸ் தொண்டர்களுக்கு ஆதரவாக கரூர் எம்பி ஜோதிமணி கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.