ETV Bharat / state

மூப்பனாரை பாஜகவுக்கு தாரை வார்த்த காங்கிரஸ்! - சென்னை, தமிழ்நாடு காங்கிரஸ், தமிழ்மாநில காங்கிரஸ்

சென்னை: காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான மூப்பனாரின் நினைவு தினத்தைக் கூட அனுசரிக்காமல் தற்போதைய காங்கிரஸ் நிர்வாகிகள் அவரைப் புறக்கணித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

congress-ignores-mooppanar
author img

By

Published : Aug 31, 2019, 1:27 AM IST

Updated : Aug 31, 2019, 12:26 PM IST

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளராகவும், காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்க தலைவராகவும் வலம் வந்தவர் ஜி.கே. மூப்பனார். 1997ஆம் ஆண்டு தேவ கவுடா அரசு கலைந்தபோது, ஐக்கிய முன்னணியின் சார்பில் மூப்பனாரை பிரதமர் பதவியில் அமர வைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்தன. ஆனால், அதனை முற்றிலுமாக நிராகரித்த இவர், இரண்டு முறை தன்னைத் தேடி வந்த மத்திய அமைச்சர் பதவியையும் நிராகரித்துள்ளார்.

காங்கிரஸ் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் அக்கட்சியில் இருந்து விலகி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினார். என்ன தான் கருத்து வேறுபாட்டினால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினாலும், பாஜக எதிர்ப்பில் திடமாய் இருந்தவர் மூப்பனார். அக்கட்சியுடன் கூட்டணி வைத்ததால் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ்.

இவ்வாறு பாஜக எதிர்ப்பில் கடுமையாக இருந்த மூப்பனார் தொடங்கிய தமிழ் மாநில காங்கிரஸ், இன்று ஜி.கே. வாசன் தலைமையில் வேறு வழியின்றி அதிமுக - பாஜக கூட்டணியில் ஐக்கியமாகி நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டது. இதையடுத்து, ஜி.கே. வாசனை கடுமையாக சாடும் விதமாக நாள்தோறும் அறிக்கைகள் வெளியிட்டு அரசியல் செய்து வருகிறார் தற்போதைய காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி.

மூப்பனாரின் நினைவு நாளான நேற்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் என்ற முறையில் அவரின் நினைவிடத்திற்குச் சென்று கே.எஸ்.அழகிரி மரியாதை செலுத்தாதது விமர்சிக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் தரப்பில் இருந்து அக்கட்சியின் முன்னாள் மாநில தலைவர் குமரி ஆனந்தன் மட்டுமே அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இது ஒருபுறமிருக்க, பாஜக மாநில தலைவர் தமிழிசை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மூப்பனார் நினைவிடம் சென்று மரியாதை செலுத்தியிருப்பது மாபெரும் காங்கிரஸ் தலைவரான மூப்பனாரை பாஜகவுக்கு காங்கிரஸ் தாரைவார்த்து விட்டதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

Intro:nullBody:காங்கிரசின் மாபெரும் தலைவரான மூப்பனாரை பாஜகவிற்கு தாரை வார்த்த காங்கிரஸ்

தேசிய அளவில் காங்கிரஸ் இயக்கத்தின் முக்கிய தலைவரான மூப்பனாரின் நினைவு நாளான இன்று காங்கிரஸ் கட்சியால் மூப்பனார் நிராகரிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக மாநில தலைவரும், குமரிஆனந்தன் தவிர இதர முக்கிய தலைவர்களும், நிர்வாகிகள் எவரும் மூப்பனார் நினைவிடம் சென்று மரியாதை செலுத்தவில்லை என்பது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. அதினும் மூப்பனரால் நிராகரிக்கப்பட்ட கட்சியான பிஜேபி தலைவர்களால் தற்போது மூப்பனார் கொண்டாடப்பட்டு வருகிறார் என்பது அனைவர் மத்தியிலும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரசின் தேசிய செயலராகவும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், முதல்வர் வேட்பாளராகவும் காங்கிரஸ் கட்சியில் 1980 முதல் செல்வாக்கு மிக்க தலைவராக மூப்பனார் திகழ்ந்து வந்தார். காங்கிரஸ் உடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தொடங்கிய சமயத்தில் பிரதமராக தேர்வு ஆகும் வாய்ப்பு கூட மூப்பனாரை தேடி வந்தது. கருத்து வேறுபாட்டினால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினாலும் பிஜேபி எதிர்ப்பில் திடமாய் இருந்த தலைவர் மூப்பனார். பிஜேபி உடன் திமுக கூட்டணி வைத்தது என்ற காரணத்தால் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறியது மூப்பனாரின் தமிழ்மாநில காங்கிரஸ்.

காலங்களுக்கு ஏற்ப அரசியல் மாற்றத்தால் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக - பிஜேபி கூட்டணி கட்சியில் மூப்பனாரின் மகன் ஜி.கே.வாசன் கட்சியான தமிழ்மாநில காங்கிரஸ் இடம்பெற்றது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தொடர்ந்து ஜி.கே.வாசனை விமர்சித்து அறிக்கைகள் வெளியிட்டு வந்தார். இந்நிலையில் மூப்பனாரின் நினைவு நாளான இன்று காங்கிரஸ் மாநில தலைவர் என்ற முறையில் கே.எஸ்.அழகிரி மூப்பனார் நினைவிடம் சென்று மரியாதை செலுத்தாது விமர்சிக்கப்பட்டு வருகிறது. மேலும் பிஜேபி மாநில தலைவர் தமிழிசை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் சென்று மரியாதை செலுத்து இருப்பது மாபெரும் காங்கிரஸ் தலைவரான மூப்பனாரை பிஜேபி கட்சிக்கு காங்கிரஸ் தாரைவார்த்து விட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.Conclusion:null
Last Updated : Aug 31, 2019, 12:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.