சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர், சங்கர் நகர் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த லாரியை வழிமறித்து விசாரித்ததில், லாரி ஓட்டுநர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த காவல் துறையினர், வாகனத்தை சோதனை செய்தபோது அதில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி ஆந்திராவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து 400 மூட்டை ரேஷன் அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி, சிறிய ரக வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக 10 பேரை கைது செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வரும் ரேஷன் அரிசியை ஆந்திராவுக்கு கடத்த முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ரேஷன் கடைகளில் இலவசமாக மாஸ்க் வழங்கப்படும் - தமிழ்நாடு அரசு