ETV Bharat / state

'200 தொகுதிகளில் அசால்ட்டாக வெற்றி பெறுவோம்' - அதிமுக அவைத்தலைவர்

சென்னை: வருகின்ற சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் அதிமுக 200 தொகுதிகளில் வெற்றிபெறும் என அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

அதிமுக அவைத்தலைவர்
அதிமுக அவைத்தலைவர்
author img

By

Published : Jan 12, 2021, 7:27 AM IST

சென்னை - ஆர்.கே. நகர் தொகுதிக்கு உட்பட்ட கொருக்குப்பேட்டைப் பகுதியில் அதிமுக சார்பில் சமத்துவப் பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது. வடசென்னை மாவட்டச் செயலாளர் ராஜேஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் கலந்து கொண்டார். ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பொங்கலிட்டனர். இதனால் அப்பகுதி திருவிழாக் கோலம் பூண்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், "அண்ணா, கலைஞர் ஆகியோரை மறந்து திமுக தலைவர் ஸ்டாலின் பேசிக் கொண்டிருக்கிறார். அவர் தரக்குறைவாக விமர்சித்து வருகிறார்.

ஸ்டாலினைப்பற்றி நான் திரும்பப் பேசினால் அவர் தாங்க மாட்டார். ஜெயலலிதா இல்லாத தேர்தலில், அவர் மனசாட்சியான எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்படுவார். அப்பா, மகன், பேரன் என்ற குடும்ப அரசியலை திமுக நடத்திக் கொண்டிருக்கிறது.

ஆனால், எம்ஜிஆர், ஜெயலலிதா நடத்திய கட்சியினை நாங்கள் வழி நடத்தி வருகிறோம். வரக்கூடிய சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் அதிமுக 200 இடங்களில் வெற்றி பெறும்" எனத் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.