ETV Bharat / state

’மாதம் 10 லட்ச ரூபாயுடன் சொகுசு வாழ்க்கை’ - கைதான ’பப்ஜி’ மதனின் மனைவி கிருத்திகா வாக்குமூலம்! - பப்ஜி

சென்னை: தங்களது யூடியூப் தளத்தின் மூலம் கிடைத்த பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும், மாதம் 10 லட்ச ரூபாய் சம்பாதித்து வருவதாகவும் கைதான பப்ஜி மதனின் மனைவி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

மதனின் மனைவி கிருத்திகா
மதனின் மனைவி கிருத்திகா
author img

By

Published : Jun 16, 2021, 11:37 PM IST

பப்ஜி விளையாட்டில் ஆபாசமாகப் பேசி விளையாடு அதை யூடியூபில் நேரலை ஒளிபரப்பு செய்து வந்தவர் மதன். தொடர்ந்து பெண்கள், குழந்தைகள் குறித்து தகாத வார்த்தையால் பேசி பதிவிட்டு வந்த மதன் மீது சமூக வலைதளங்களில் கண்டனங்கள் கிளம்பின. குறிப்பாக மதன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புளியந்தோப்பு சைபர் கிரைம் காவல் துறையினருக்கு இரண்டு புகார்கள் வந்தன.

சிக்காத மதன்

இதனையடுத்து புகாரின் அடிப்படையில் மதனை நேரில் ஆஜராகுமாறு காவல் துறையினர் சம்மன் அனுப்பினர். ஆனால் மதன் நேரில் ஆஜர் ஆகாததால் காவல் துறையினர் தனிப்படை அமைத்து அவரை தேடத் தொடங்கினர். குறிப்பாக மதன் வி.பி.என் சர்வரைப் பயன்படுத்தி செல்போன் உபயோகிப்பது, நேரலை செய்வது என்றிருப்பதால் காவல் துறையினர் யூ-டியூபர் மதனை நெருங்குவதில் சிக்கல் தொடர்ந்து வருகிறது.

பப்ஜி மதன் மீது சென்னை மத்தியக் குற்றப்பிரிவு சைபர் கிரைமிலும் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து புளியந்தோப்பு சைபர் கிரைம் பிரிவு மற்றும் மத்தியக் குற்றப்பிரிவு காவலர்கள் இணைந்து அவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர். மதன் மீது சென்னை மத்தியக் குற்றப்பிரிவு சைபர் கிரைமில் கொடுக்கப்பட்டிருந்த ஒரு புகாரில் நான்கு பிரிவுகளில் மதன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, புளியந்தோப்பு பிரிவில் இருந்த இரண்டு புகார்களும் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு சைபர் கிரைமிற்கு மாற்றப்பட்டுள்ளது.

குவிந்த புகார்கள்

இந்த நிலையில் பப்ஜி மதன் மீது தமிழ்நாடு முழுவதுமிருந்து ஏராளமான புகார்கள் ஆன்லைன் மூலம் காவல்துறைக்கு வரத் தொடங்கின. குறிப்பாக தமிழ்நாடு காவல்துறைக்கு இதுவரை 159 ஆன்லைன் புகார்கள் பப்ஜி மதன் மீது வந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் புகார்களை அந்தந்த மாவட்டங்களில் இருக்கும் சைபர் பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்பத்தாரிடம் நடத்தப்பட்ட விசாரணை

இந்த நிலையில் யூ-டியூபர் மதனை நெருங்கும் முயற்சியின் ஒரு பகுதியாக பெருங்களத்தூரில் உள்ள மதன் வீட்டில் இருந்து அவரது தந்தை மாணிக்கம் (78) அவரது அண்ணன், சேலம் மாவட்டத்திலுள்ள அவரது மனைவி கிருத்திகா மற்றும் எட்டு மாதக் கைக்குழந்தையை அழைத்து வந்து சென்னை சைபர் கிரைம் காவல் துறையினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து தொடர் விசாரணை மேற்கொண்டனர்.

மனைவி கிருத்திகாவுடன் பப்ஜி மதன்
மனைவி கிருத்திகாவுடன் பப்ஜி மதன்

இந்த விசாரணையில் மதன், கிருத்திகா இருவரும் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும், இருவரும் பொறியியல் பட்டதார்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. கல்லூரி படிக்கும்போது இருவரும் காதலித்து வந்த நிலையில், இவர்களது திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மதன், கிருத்திகா இருவரும் தனி வீட்டில் ஒன்றாக வசித்து வந்தனர். தொடர்ந்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு எட்டு மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

மனைவி கிருத்திகாவுடன் பப்ஜி மதன்
மனைவி கிருத்திகாவுடன் பப்ஜி மதன்

மதனும் கிருத்திகாவும் இணைந்து மூன்று யூடியூப் சேனல்களைத் தொடங்கி பப்ஜி விளையாட்டு குறித்து பேசி சேனலில் வெளியிட்டு வந்துள்ளனர். ஆனால் அதில் போதுமான பார்வையாளர்கள் கிடைக்காத நிலையில், குறுகிய வழியில் உடனடியாக பணம் சம்பாதிப்பதற்காக பெண்கள் குறித்து ஆபாசமாகப் பேசி மதன் வீடியோ வெளியிடத் தொடங்கியுள்ளார். இதற்கு சிறுவர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்தது. இதனால் எட்டு லட்சத்திற்கும் மேல் பார்வையாளர்கள் இவர்களது சேனலை பின்தொடரத் தொடங்கியுள்ளனர்.

குழந்தையுடன் மதன், கிருத்திகா
குழந்தையுடன் மதன், கிருத்திகா
கிருத்திகா
கிருத்திகா

மாதத்திற்கு 10 லட்சம் ரூபாய் வரை சம்பாதித்து வந்ததாகவும், கிடைத்த பணத்தில் பெருங்களத்தூரில் இரண்டு சொகுசு பங்களாக்கள், இரண்டு சொகுசு கார்கள் வாங்கியதாகவும் கூறினார். திடீரென பப்ஜி தடை செய்யப்பட்டதால் வி.பி.என் சர்வரைப் பயன்படுத்தி விளையாடி வந்ததாகத் தெரிவித்தார். இதனையடுத்து அவர்கள் பயன்படுத்திய லேப்டாப்,செல்போன் உள்ளிட்ட பொருள்களையும், கிடைத்த பணத்தில் வாங்கிய இரண்டு சொகுசு கார்கள், இரண்டு பங்களா ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். கணவர் மதன் குறித்த கேள்விக்கு கிருத்திகா உரிய பதிலளிக்கவில்லை எனவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பப்ஜி மதன் - கிருத்திகா தம்பதியினரின் சொகுசு கார்

பின்னர் மதனுக்கு உடந்தையாக இருந்த கிருத்திகாவை கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வருகிற 30 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து கிருத்திகா தனது எட்டு மாதக் குழந்தையுடன் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை யாரும் விளையாட வேண்டாம் எனவும் சென்னை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.