ETV Bharat / state

கணினி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு அறிவிப்பு - சென்னை

சென்னை: அரசுப் பள்ளி கணினி ஆசிரியர்களுக்கான தேர்வு தேதியை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

தேர்வு
author img

By

Published : May 20, 2019, 10:20 PM IST

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் கணினி முதுகலை ஆசிரியர்கள் 814 பேரை தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் மார்ச் 20ஆம் தேதி முதல் ஏப்ரல் 10ஆம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் பெறப்பட்டது. இதற்காக 20,690 பேர் விண்ணப்பம் செய்தனர். மக்களவைத் தேர்தல் நடைபெறுவதால் தேர்வு நடைபெறும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது.

இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "2018-2019 ஆண்டுக்கான கணினி பயிற்றுநர் நேரடி நியமனத்திற்கான அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் மார்ச் 1ஆம் தேதி வெளியிடப்பட்டது. இணையவழித் தேர்வு (ஆன்லைன்) ஜுன் 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதன்முறையாக ஆன்லைன் மூலம் 150 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முதுகலைக் கம்ப்யூட்டர் ஆசிரியர் பணி
ஜூன் 26 ந் தேதி ஆன்லைன் தேர்வு  

சென்னை,
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் கம்ப்யூட்டர்  முதுகலை ஆசிரியர்கள் 814 பேரை தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் மார்ச் 20 ந் தேதி முதல் ஏப்ரல் 10 ந் தேதி வரையில் ஆன்லைன் மூலம் பெறப்பட்டது. அதற்காக 20,690 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதால் , அறிவிப்பின் போது இவர்களுக்கான தேர்வு நடைபெறும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  2018-2019ம் ஆண்டு கணினி பயிற்றுநர் (நிலை-1) (முதுகலை ஆசிரியர் நிலை)
நேரடி நியமனத்திற்கான  அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்தினால்
 1. 3.2019 அன்று வெளியிடப்பட்டது. இணையவழித் தேர்வு(ஆன்லைன்)  23. 6.2019  ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்ற தகவல் ஆசிரியர் தேர்வு
வாரிய இணையதளத்தில்  வெளியிடப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.
முதன்முறையாக ஆன்லைன் மூலம்  150 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.