ETV Bharat / state

துரைமுருகன் மீது சாதிய வன்கொடுமை புகார்... நடவடிக்கை எடுக்க உத்தரவு - dmk general seceratary

வேலூர்: தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் மற்றும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மீது அளிக்கப்பட்ட நில அபகரிப்பு மற்றும் சாதிய வன்கொடுமை புகார் குறித்து 15 நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்க தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

durai
durai
author img

By

Published : Jul 21, 2021, 1:36 AM IST

காட்பாடியை அடுத்த சேர்க்காடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் டெல்லியில் உள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் மீது சாதிய வன்கொடுமை மற்றும் நில அபகரிப்பில் ஈடுபட்டதாக புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகார் மனுவில், ”வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்க்காடு பகுதியில் வசிக்கும் பட்டியலின மக்களிடம் துரைமுருகனின் உறவினர்களும், திமுக கட்சியினரும் சாதி ரீதியான வன்கொடுமையில் ஈடுப்படுகின்றனர். தன்னையும், தனது சகோதரரையும் துரைமுருகனின் தூண்டுதலின்பேரில் அவரது உறவினர்கள் முருகன் மற்றும் பெருமாள், அவர்களது தந்தை கிருஷ்ணன் ஆகியோர் தாக்கி நில அபகரிப்பில் ஈடுப்பட்டனர்.

இதுகுறித்து திருவலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.துரை முருகன் மீதும், அவரது உறவினர்கள், ஆதரவாளர்கள் ஆகியோர் மீதும் சாதிய வன்கொடுமை புகாரில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், புகாரின் மீது 15 நாள்களுக்குள் உரிய நடவடிக்கை எடுத்து அதற்கான அறிக்கையை அளிக்க வேண்டும். அனைத்து ஆவணங்களுடனும் புலன் விசாரணை நடத்தும் அலுவலருடன், வேலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகஸ்ட் 6ஆம் தேதியன்று நேரில் ஆஜராக வேண்டும் என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.