ETV Bharat / state

காப்பீட்டு நிறுவன ஊழியரை கடத்திய சம்பவம்: தம்பதி புகார்

காப்பீட்டு நிறுவன ஊழியரைக் கடத்தியதாகக் கூறப்பட்ட தம்பதி காவல் ஆணையர் அலுவலகத்தில் நேரடியாக வந்து புகார் அளித்துள்ளனர்.

author img

By

Published : Apr 24, 2021, 3:16 PM IST

Kidnap issue
Kidnap issue

சென்னை: தங்களுக்கு காப்பீடு வழங்கிய முகவர்கள் தமிழ்நாடு முழுவதும் பலரை ஏமாற்றியுள்ளதாக தம்பதி புகாரளித்துள்ளனர்.

அயனாவரத்தைச் சேர்ந்தவர் கிரிதரன், ஸ்வேதா தம்பதியினர். இவர்களுக்குத் திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகின்றன. கிரிதரன் நாய்களுக்குப் பிரத்யேகமாக உணவு வழங்கும் கடையை நடத்திவருகிறார்.

தங்களுடைய வியாபாரத்தைப் பெருக்குவதற்காக கடன் வாங்கும் எண்ணத்தில் இணையதளம் மூலமாக பஜாஜ் பின்செர்வ் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தை கடந்த மார்ச் மாதம் 19ஆம் தேதி தொடர்புகொண்டுள்ளனர்.

தங்களுக்கு 40 லட்ச ரூபாய் வரை தொழிலை விரிவுப்படுத்த கடன் வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இரண்டு நாள்கள் கழித்து அவர்களுக்கு பஜாஜ் பின்செர்வ் கார்ப்பரேஷனிலிருந்து பேசுவதாக நிதின் என்பவர் பேசியிருக்கிறார்.

52 ஆயிரம் ரூபாய் வரை ஆயுள் காப்பீடு பாலிசி எடுத்தால் அதனடிப்படையில் கடன் வழங்க முடியும் எனத் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கணவன், மனைவி இருவரும் தனித்தனியாக 52 ஆயிரம் ரூபாய் கட்டி பாலிசியை எடுத்துள்ளனர்.

இன்சூரன்ஸ் ஊழியரைக் கடத்தியதாகக் கூறிய தம்பதி

பாலிசி மோசடி

பாலிசி வீட்டிற்கு வந்த பின்புதான் தெரிந்தது அது பின்செர்வ் கார்ப்பரேஷனிலிருந்து எடுக்கப்படாமல் ஸ்ரீராம் லைஃப் இன்சூரன்ஸிலிருந்து எடுக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது தொடர்பாக தங்களிடம் பேசிய எண்களைத் தொடர்பு கொண்டபோது அனைத்து எண்களும் ஸ்விட்ச் ஆப்பில் இருந்ததால் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனிடையே பாலிசியை உறுதிப்படுத்துவதற்காக ஒரு மாதம் கழித்து ஒரு அழைப்பு வரும் என்றும் கூறியுள்ளனர். நரேந்திரன் என்பவர் இந்தத் தம்பதிக்கு தொலைபேசியில் அழைத்து உறுதிப்படுத்தியிருக்கிறார்.

அப்போது உங்கள் நிறுவனத்திடமிருந்து எந்தவிதமான பதிலும் வரவில்லை. இதனால் உங்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

அதன்பின்பு கோடம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீராம் பார்ச்சூன் என்ற நிறுவனம்தான் முகவராக இந்த வேலையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து நேரடியாக அந்த அலுவலகத்திற்குச் சென்ற தம்பதி தங்களிடம் பேசிய பால் ஜோசப் என்பவரைப் பிடித்துள்ளனர். அவர்தான் இவர்களிடம் பாலிசியின் அடிப்படையில் கடன் தருவதாகக் கூறி பேசியிருக்கிறார்.

இன்சூரன்ஸ் ஊழியர் கடத்தல் - தம்பதி புகார்

இதனையடுத்து தங்களுடைய பணத்தைத் திருப்பிக் கொடுத்தால்தான் ஊழியரை விடுவிக்க முடியும் எனக் கூறி கிரிதரன் தன்னுடைய காரில் அழைத்துச் சென்றுள்ளார்.

இதன்பின்பு வேறு வங்கிக் கணக்குகளிலிருந்து சிறிது சிறிதாக தம்பதி கட்டிய பணத்தை திருப்பி அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் பணம் கொடுத்தால் மட்டுமே உங்கள் ஊழியரை விடமுடியும் எனத் தம்பதி மிரட்டியதாக ஸ்ரீ ராம் பார்ச்சூன் கம்பெனி கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.

இப்புகாரின்பேரில் காவல் துறையினர் தம்பதியைத் தேடிவந்த நிலையில், தற்போது இருவரும் காவல் ஆணையர் அலுவலகத்தில் நேரடியாக வந்து புகார் அளித்துள்ளனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது, "இந்த நிறுவனம் இதேபோன்று கோடிக்கணக்கில் பல நபரிடம் போனில் தகவலைப் பெற்று இன்சூரன்ஸ் மூலமாக கடன் வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்திருப்பதை இந்தத் தம்பதி கண்டுபிடித்ததாகவும், அதனை மறைக்கவே தங்கள் மீது கடத்தல் புகாரை ஸ்ரீராம் பார்ச்சூன் கம்பெனியினர் அளித்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் இதே போன்று ஆயிரக்கணக்கான நபர்களை இந்த ஸ்ரீராம் பார்ச்சூன் நிறுவனம் ஏமாற்றி பணம் மோசடி செய்திருப்பதும் அதற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளது" எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: சீவலப்பேரி பூசாரி கொலை: கழுத்தை அறுக்க முயன்ற நபரால் பரபரப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.