ETV Bharat / state

ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு சங்க முன்னாள் நிர்வாகி உள்பட மூவர் மீது புகார்

author img

By

Published : Jun 17, 2021, 6:43 AM IST

ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு சங்க வளர்ச்சி நிதி ரூ.10 லட்சத்தை முறைகேடு செய்ததாக, அச்சங்கத்தின் முன்னாள் பொருளாளர் உள்பட மூவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு
ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்கீழ், எழும்பூரில் உள்ள எஸ்.டி.ஏ.டி. வளாகத்தில் ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு சங்கம் இயங்கிவருகிறது. இச்சங்கத்தின் சார்பில் சென்னை மயிலாப்பூரில் இயங்கிவரும் தனியார் வங்கியில் கணக்கு தொடங்கப்பட்டு சங்க செயலாளர், பொருளாளர் மூலம் நிதிநிலை பராமரிக்கப்பட்டுவருகின்றது.

2019ஆம் ஆண்டு புதிய நிர்வாகக் குழுவைத் தேர்ந்தெடுக்கும்பொருட்டு தேர்தல் நடைபெற்றது. இதில் வெற்றிபெற்று சேகர் மனோகரன் தலைவராகவும், ரேணுகா லட்சுமி செயலாளராகவும், ராஜராஜன் பொருளாளராகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

சங்க வளர்ச்சிக்காக அரசு மூலம் ரூ.10 லட்சம் வளர்ச்சி நிதியாக சங்கத்தின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் முன்னாள் பொருளாளர் செந்தில் ராஜ்குமார், தற்போதைய தலைவர் சேகர் மனோகரன், பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் இணைந்து சங்க வளர்ச்சி நிதியில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக அந்தப் புகாரில் வங்கி மேலாளரிடம் புதிய நிர்வாகக் குழுவின் தேர்வு பற்றிய உண்மையைக் கூறாமல், பழைய காசோலையைப் பயன்படுத்தி வங்கியை ஏமாற்றி பணத்தை அபகரித்துக் கொண்டதாக, சங்க உறுப்பினர்கள் மாரீஸ்வரன், ராணி ஆகியோர் சென்னை மத்தியக் குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளனர்.

மூவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு காவலர்கள் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க : ’மாதம் 10 லட்ச ரூபாயுடன் சொகுசு வாழ்க்கை’ - கைதான ’பப்ஜி’ மதனின் மனைவி கிருத்திகா வாக்குமூலம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.