ETV Bharat / state

மீனவர்களை பாதிக்கும் திட்டங்களை தடுத்து நிறுத்துக...! - மெரினா கடற்கரை

சென்னை: மெரினா கடற்கரை, அதனைச் சுற்றியுள்ள மீனவ கிராமங்களில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் பல திட்டங்கள் நடைபெறுவதைத் தடுத்து நிறுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று தென்னிந்திய மீனவர் சங்கம் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

வாழ்வாதாரம்
author img

By

Published : May 31, 2019, 10:17 AM IST

இது குறித்து மீனவ சங்கத் தலைவர் பாரதி பேசுகையில், "கடற்கரை ஒழுங்குமுறை ஆணையை பெறாமல் மெரினா கடற்கரையில் மிகப்பெரிய திட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. மெட்ரோ ரயில் திட்டம், மெரியா லூப் சாலையில் நடக்கும் கட்டுமான பணிகள், மெரினா கடற்கரையில் சென்னை மாநகராட்சி கொண்டுவர உள்ள பல்வேறு திட்டங்கள் போன்றவற்றிற்கான அறிவிப்புகள் கொடுத்துள்ளனர். இது அங்கு பாரம்பரியமாக வசித்துவரும் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும். எனவே இது சம்பந்தமாக இன்று புகார் அளித்துள்ளோம்.

மேலும் 2014ஆம் ஆண்டு மெரினா லூப் சாலை போடும்போதே இது மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் இருப்பதால் இதற்கு அனுமதி தரக்கூடாது என்று புகார் அளித்திருந்தோம். அதேபோல் கடற்கரை ஒழுங்குமுறை அறிவிப்பாணையில் உள்ளூர் மீனவ கிராமங்களை குறிப்பிட்டு ஒரு வரைபடம் தயாரிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் இன்றுவரை அந்த வரைபடம் தயார் செய்யப்படவில்லை. இது சம்பந்தமாக நாங்களே 2018இல் ஒரு வரைபடத்தை தயார் செய்து ஒப்புதலுக்கு அனுப்பிவைத்தோம். ஆனால் அதன்மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தென்னிந்திய மீனவ சங்கத்தினரின் செய்தியாளர் சந்திப்பு

காலம் காலமாக வாழும் மீனவர்களுக்கு மீன் சந்தை கட்டிக் கொள்ளவதற்கு அனுமதி மறுக்கப்படுகின்றது. ஆனால் அதே கடற்கரையில் மாளிகை போன்ற கட்டடங்கள் கட்ட அனுமதி அளிக்கப்படுகிறது. மெரினா கடற்கரை தாரைவார்க்கப்படுவதை நிறுத்த வேண்டும். அப்படி இல்லையென்றால் கடற்கரை மண்டல் மேலாண்மை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டங்கள் நடத்தப்படும்" என்று தெரிவித்தார்.

சென்னை மெரினா கடற்கரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மீனவ கிராமங்களில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் பல திட்டங்கள் நடைபெறுவதாகவும் இதனை தடுத்து நிறுத்தி கடலோர மீனவ கிராமங்கள் உள்ளடங்கிய திட்ட வரைப்படத்தை தயாரித்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் கடற்கரை மண்டல மோலாண்மை அலுவலரிடம் தென்னிந்திய மீனவர் சங்கம் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.

இது குறித்து பேசிய சங்க தலைவர் பாரதி, "கடற்கரை ஒழுங்குமுறை ஆணையை பெறாமல் மெரினா கடற்கரையில் மிகப்பெரிய திட்டங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக மெட்ரோ ரயில் திட்டம், மெரியா லூப் சாலையில் நடக்கும் கட்டுமானப் பணிகள், மெரினா கடற்கரையில் சென்னை மாநாகராட்சி கொண்டுவர உள்ள பல்வேறு திட்டங்கள் போன்றவற்றிற்கு அறிவிப்புகள் கொடுத்துள்ளனர். இது அங்கு பாரம்பரியமாக வசித்து வரும் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும். எனவே இது சம்பந்தமாக இன்று புகார் அளித்துள்ளோம்.

மேலும் 2014 ஆம் ஆண்டு மெரினா லூப் சாலை போடும்போதே இது மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் இருப்பதால் இதற்கு அனுமதி தரக்கூடாது என்று புகார் அளித்திருநேதோம். அதேபோல் கடற்கரை ஒழுங்குமுறை அறிவிப்பாணையில் உள்ளூர் மீனவ கிராமங்களை குறிப்பிட்டு ஒரு வரைப்படம் தயாரிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இன்றுவரை அந்த வரைப்படம் தயார் செய்யப்படவில்லை. இது சம்பந்தமாக நாங்களே 2018 இல் ஒரு வரைப்படத்தை தயார் செய்து ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தோம். ஆனால் அதன்மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

காலம் காலமாக வாழும் மீனவர்களுக்கு மீன் மார்க்கெட் கட்டிக் கொள்ளவதற்கு அனுமதி மறுக்கப்படுகின்றது. ஆனால் அதே கடற்கரையில் மாளிகை போன்ற கட்டிடங்கள் கட்ட அனுமதி அளிக்கப்படுகின்றது. 2013 சிஆர்சட் திட்டத்தை தற்போது சிஆர்சட் 2019 ஆக கொண்டுவந்துள்ளனர். இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் நடத்திய கருத்துக்கேட்பு கூட்டத்தில் நாங்கள் எங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தோம்.

பாரம்மபரியமாக வாழும் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் உள்ளூர் திட்ட வரைப்படத்தை தயாரிக்கும்வரை மெரினா கடற்கரையில் எந்த திட்டமும் அனுமதிக்க கூடாது. இதுபோல் மெரினா கடற்கரையை அரசுக்கும், தனியாருக்கும் தாரைவார்ப்பதை நிறுத்த வேண்டும். அப்படி இல்லையென்றால் கடற்கரை மண்டல் மேலாண்மை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டங்கள் நடத்தப்படும்" என்று தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.