ETV Bharat / state

Viral audio - கல்லூரி மாணவியிடம் மிரட்டல் தொனியில் பேசிய காவலர் மீது புகார்

நள்ளிரவில் தொலைபேசியில் தொடர்புகொண்டு தகாத வார்த்தைகளால் பேசி தொல்லை கொடுத்ததாக காவலர் மீது கல்லூரி மாணவி மற்றும் அவரது காதலன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

மிரட்டல் தொனியில் பேசிய காவலர்
மிரட்டல் தொனியில் பேசிய காவலர்
author img

By

Published : Jul 14, 2022, 6:14 PM IST

சென்னை மதுரவாயல் புறவழிச் சாலையிலுள்ள போரூர் சுங்கச்சாவடி அருகே நேற்று முன்தினம் (ஜூலை 12) இரவு வளசரவாக்கத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் தனது காதலனுடன் காரில் அமர்ந்து பேசிகொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது ரோந்து பணியில் இருந்த மதுரவாயல் காவல் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு காவலர்கள் காரில் இருந்தவர்களை இங்கு நிற்கக் கூடாது என எச்சரித்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் காவலர்கள் விசாரித்துள்ளனர். அப்போது அவர்கள், தாங்கள் காதலர்கள் என்றும், இருவீட்டார் சம்மதத்துடன் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் கூறியுள்ளனர்.

ஆனால், காவலர்கள் அதனை கேட்காததால், அந்த காதல் ஜோடி தங்களது குடும்பத்தினரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு நடந்தவற்றை கூறி செல்போனை காவலர்களிடம் கொடுத்துள்ளனர். அவர்களும் விரைவில் திருமணம் நடக்க இருப்பதை உறுதி செய்து பேசியதாக கூறப்படுகிறது. இருந்த போதிலும் அவர்களது பெயர், முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை காவலர்கள் வாங்கிக் கொண்டு இருவரையும் அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில் ரோந்துப் பணிக்குச் சென்ற காவலர்களுள் ஒருவரான மதுரவாயல் காவல் நிலைய குற்றப்பிரிவு பிரிவில் பணியாற்றி வரும் கிருஷ்ண குமார், ரோந்து சென்றபோது கிடைத்த கல்லூரி மாணவியின் செல்போன் எண்ணுக்கு நேற்று (ஜூலை 13) நள்ளிரவில் தொடர்புகொண்டு மாணவிக்கு தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

மிரட்டல் தொனியில் பேசிய காவலர்

குறிப்பாக கல்லூரி மாணவியான இளம் பெண்ணிடம் உனது நண்பர் தொலைபேசி எண்ணை கொடுத்ததாக கூறி பேச முயன்ற நிலையில், ஒரு கட்டத்துக்கு மேல் பொறுமையிழந்த இளம் பெண் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூற முடியவில்லை. டோல்கேட் அருகே பிடிப்பட்டதை கூறியும், உனது காதலனின் தந்தை உன் மீது புகார் அளித்து இருப்பதாகவும், நீ பாலியல் தொழில் செய்வது தெரியும் எனவும் கூறி இளம்பெண்ணை காவலர் கிருஷ்ண குமார் மிரட்டியுள்ளார்.

காவலரின் உள்நோக்கத்தை புரிந்துகொண்ட கல்லூரி மாணவி தனது காதலனிடம் விவரத்தைக் கூற, பெண்ணின் காதலன் அந்த காவலரை தொடர்புகொண்டு கண்டித்துள்ளார். அதன் விளைவாக அவருக்கும், இளம் பெண்ணிற்கும் காவலர் கிருஷ்ண குமார் தொடர்ந்து வாட்ஸ் ஆப், வாய்ஸ் மெசேஜ் அனுப்பியும், தொலைபேசியில் தொடர்பு கொண்டும் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், அந்த பெண் பாலியல் தொழிலாளி எனவும் இருவரும் காவல் நிலையத்திற்கு வர வேண்டும் என காவலர் கிருஷ்ண குமார் மிரட்டியுள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி மற்றும் அவரது காதலன் ஆகியோர் காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று (ஜூலை 14) புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து காவல் ஆணையர் அறிவுறுத்தலின் பேரில் சம்பந்தப்பட்ட காவலர் கிருஷ்ண குமாரிடம் துறை ரீதியிலான விசாரணை நடத்தி வருவதாக காவலர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காவலர் கிருஷ்ண குமார் கல்லூரி மாணவியை தரக்குறைவாகவும், மிரட்டியும் பேசிய ஆடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: திருமணத்தை மீறிய உறவு விவகாரம்; மருத்துவமனை ஊழியர் குத்திக்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.