ETV Bharat / state

முரசொலி நாளிதழை தடைசெய்ய வேண்டும்! - காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

சென்னை: டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்ற குழந்தை இறந்துவிட்டதாக பொய்யான செய்தியை பரப்பிய முரசொலி நாளிதழை தடைசெய்யக் கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டது.

complaint-about-murasoli-paper-in-commissioner-office
author img

By

Published : Oct 29, 2019, 6:12 PM IST

சென்னை நுங்கம்பாக்கம் தெய்வ நாயகம் பகுதியை சேர்ந்தவர் ரவிகிருஷ்ணன். இவரது மகன் முகில் கிருஷ்ணன்(8). இவருடைய மகன் கடந்த 21ஆம் தேதி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு எழும்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதையடுத்து கடந்த 22ஆம் தேதி சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற சிறுவனுடன் தந்தை

இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி திமுக மேற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் நுங்கை எஸ்.சுரேஷ் தலைமையில் ஆயிரம் விளக்கு பகுதியில் டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்த சிறுவனின் தந்தை

இதுதொடர்பாக கடந்த 24ஆம் தேதி வெளிவந்த முரசொலி நாளிதழில், டெங்கு காய்ச்சலால் முகில் கிருஷ்ணன் என்ற சிறுவன் பலி என செய்தி வெளிவந்தது.இதையடுத்து பொய்யான செய்தியைப் பரப்பிய முரசொலி நாளிதழை மூடக்கோரியும், அதிமுக-வின் பெயருக்கு பங்கம் விளைவிக்கும்விதமாக செய்தியை பரப்புவதாகவும் காவல் ஆணையர் அலுவலகத்தில் சிறுவனின் தந்தை சார்பாக புகாரளிக்கப்பட்டது.

இதையும் படிங்க: சீமானை தொடர்ந்து தமிழிசையை கிண்டல் செய்த முரசொலி!

Intro:Body:டெங்குவால் சிகிச்சை பெற்ற குழந்தையை இறந்து விட்டதாக பொய்யான செய்தியை பரப்பிய முரசொலி நாளிதழை தடைச்செய்ய கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்.

சென்னை நுங்கம்பாக்கம் தெய்வ நாயகம் பகுதியை சேர்ந்தவர் ரவிகிருஷ்ணன்.இவரது மகன் முகில் கிருஷ்ணன்(8).இவருடைய மகன் கடந்த 21 ஆம் தேதி டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு எழும்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 22 ஆம் தேதி சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் கடந்த 23 ஆம் தேதி திமுக மேற்கு மாவட்ட இளைஞரனி துணை அமைப்பாளர் நுங்கை எஸ்.சுரேஷ் தலைமையில் ஆயிரம் விளக்கு பகுதியில் டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் நிலவேம்பு கசாயம் வழங்கினார்.

இது தொடர்பாக கடந்த 24ஆம் தேதி வெளிவந்த முரசொலி நாளிதழில் டெங்கு காய்ச்சலால் முகில் கிருஷ்ணன் என்ற சிறுவன் பலி என பொய்யான செய்தி வெளிவந்தது..மேலும் பொய்யான செய்தியை பரப்பிய முரசொலி பத்திரிக்கையை மூடக்கோரி புகார் அளித்துள்ளதாகவும்,அதிமுக வின் பெயருக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக செய்தியை பரப்புவதாகவும் குற்றம்சாட்டினார்.

பேட்டி:ரவி கிருஷ்ணன் (சிறுவனின் தந்தை)Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.