சென்னை: சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று (நவம்பர் 14) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் ஆகிய அனைத்து பண்டிகை காலங்களிலும் சுகாதாரத் துறை விழிப்புடன் இருந்தததாகவும் அதேபோல் தற்போதும் விழிப்புடன் உள்ளதாகவும் தெரிவித்தார்.
கடந்தாண்டு விட இந்தாண்டு தீபாவளி மிகவும் பாதுகாப்பான, ஆனந்தமாக இருப்பதாகக் கூறிய அவர், அதிகளவு பணியாளர்களுடன் 108 கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வந்தாலும் அசம்பாவித அழைப்புகள் ஏதும் பெரிய அளவில் வரவில்லை என்றும் சென்ற முறையை விட இந்த முறை அழைப்புகளின் எண்ணிக்கை குறைவாக வந்துள்ளது என்றும் தெரிவித்தார்.
மேலும், கரோனா உறுதியாகும் நபர்களை உடனடியாக தனிமைப்படுத்தி மக்களுக்கு கரோனா பரவாத வகையில் தமிழ்நாடு சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துவருவதாகவும் தெரிவித்தார்.
முன்னதாக, பண்டிகை காலத்தில் களத்தில் பணியாற்றிவரும் பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த அமைச்சர் விஜயபாஸ்கர், 108 ஆம்புலன்ஸில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
இதையும் படிங்க: எச். ராஜாவை ஓரங்கட்டுகிறதா பாஜக?