ETV Bharat / state

மாண்புமிகு சபாநாயகருக்கு ஒரு சாமானியனின் கடிதம்..!

author img

By

Published : Apr 15, 2019, 8:00 PM IST

சென்னை: கடந்த 500 நாட்களுக்கு மேலாக தமிழகத்தில் உள்ள 18 சட்டப்பேரவை தொகுதிகள் காலியாக உள்ளது. மன்னிக்க வேண்டும் 'காலி'யாக்கப்பட்டது.

சபாநாயகர் தனபால்

18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தற்போது அறிவிக்கப்பட்டாலும், என்ன காரணத்துக்காக அந்த தொகுதிகள் மீண்டும் தேர்தலை சந்திக்கிறது என்பதை அறிந்து கொள்ளவும், மேலும் சில விளக்கங்களை பெறவே, 'மேதகு' சபாநாயகருக்கு இந்த கடிதத்தினை ஒரு சாமானியனாக எழுத விழைகிறேன். தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக உங்களால் அறிவிக்கப்பட்ட அந்த 18 பேரும், 'முதல்வரை மாற்றக்கோரி ஆளுநரிடம் மனு அளித்ததால், அவர்கள் அனைவரும் சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவித்தீர்கள்!

நான் சட்டம் படித்தவன் அல்ல, உங்கள் அளவுக்கு சட்டப்பேரவை விதி பற்றிய பரிச்சயம் கூட எனக்கு கிடையாது. அதனால், இந்த 'நீக்கம்' என்பது சட்டத்துக்கு உட்பட்டதா? அல்லது விதிமுறைகளுக்கு மாறானதா? என்று கூட என்னால் முழுமையாக புரிந்துகொள்ள முடியாது. ஆனால், என்னுடைய அரைகுறை அறிவுக்கு, தகுதிநீக்கம் பற்றிய சில சட்டவிதிகள் ஞாபகத்துக்கு வருவதையும் என்னால் தடுக்க இயலவில்லை. அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்காகவே நான் இந்த கடித்ததை எழுத முற்படுகிறேன்.

ஒரு கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அந்த பதவி காலத்துக்குள் மாற்று கட்சிக்கு சென்றால் அவர்களின் பதவி உடனடியாக பறிபோய்விடும் என்பதை நான் அறிவேன். மேலும், ஒரு கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் 3 இல் 1 பங்கு உறுப்பினர்கள் விலகி, மாற்றுக்கட்சிக்கு சென்றால் அவர்களின் பதவி பறிபோகாது என்றும், அவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாகவே தொடர்வார்கள் என்பதும் நான் அறிந்ததே.

அதாவது, 30 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள கட்சியில் இருந்து, ஏதோ ஒரு காரணத்தால் அவர்களில் 10 உறுப்பினர்கள் மாற்றுக்கட்சிக்கு சென்றால், அவர்களின் பதவி தப்பும் என்பதே இதன் பொருளாக நான் இன்றுவரை புரிந்து வைத்துள்ளேன். கூடுதலாக நம்பிக்கை வாக்கெடுப்பின் போது கொறடா உத்தரவுக்கு எதிராக வாக்களித்தாலும் பதவி பறிபோகும் என்பதும் நான் அறிந்ததே!

இந்த விதிமுறைகள் அனைத்தும் சட்டத்துக்கு உட்பட்டதுதான் என்பதை, 40 ஆண்டுகாலமாக தமிழக சட்டப்பேரவையில் உறுப்பினராக இருக்கும் நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் என்ற நப்பாசையுடனே என் கடித்தை மேலும் தொடர்கிறேன். அந்த வகையில் 18 எம்.எல்.ஏக்களும் ஆளுநரிடம் கடிதம் கொடுத்தது, தகுதிநீக்க விதியில் வருமா? என்றால், ஆம் அல்லது இல்லை என்று என்னால் உறுதியாக கூற முடியவில்லை.

ஏனென்றால் எனக்கு அடிப்படை சட்டம் மட்டுமே தெரியும். மேலும், சட்டமன்ற விதியினை நீங்கள் கரைத்து குடித்திருப்பீர்கள்! அதில், எனக்கு எள்முனை அளவு கூட சந்தேகமில்லை. ஆனால், இந்த இடத்தில் ஒரு சந்தேகம் எழுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை.

எங்களின் 'சபாநாயகர்' என்ற உரிமையோடு சில சந்தேகங்களை கேட்க நான் விரும்புகிறேன். கடந்த 2017 -ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி என்று நினைக்கின்றேன், தற்போதைய ஆளும் அரசு நம்பிக்கை கோரும் தீர்மானத்தை சட்டப்பேரவையில் கொண்டு வந்தது. சிலமணி நேர அமளிக்கு பிறகு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அப்போது, ஆளும் கட்சியான அதிமுகவுக்கு 130க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்ததாக என் நினைவு. நீண்ட வாக்குவாதங்கள், அடிதடிகளுக்கு பின்பு நம்பிக்கை வாக்கெடுப்பும் நடத்தி முடிக்கப்பட்டது. ஆளும் அதிமுக அரசு வெற்றிபெற்று சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மை பலத்தை நிரூபித்தது. ஆனால், சபைக்கு வந்த அதிமுக உறுப்பினர்களில் 122 பேர் மட்டுமே அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். 10க்கும் மேற்பட்ட அதிமுக உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.

அவர்கள் மீது கட்சிக்கு எதிராக வாக்களித்தார்கள் என்று அதிமுகவின் கொறடா, அடுத்த சில நாட்களிலேயே உங்களிடம் புகார் அளித்தார். நான் 90-ஸ் கிட்ஸாக இருப்பதால் முதல் முறையாக கொறடா உத்தரவை எதிர்த்து வாக்களித்த உறுப்பினர்களின் தகுதி நீக்கத்தை எதிர்பார்த்து, அடுத்த ஒரு வாரம் நான் கல்லூரிக்கு கூட போகாமல் கட் அடித்து விட்டு, உங்களின் தீர்ப்பை எதிர்பார்த்து தொலைக்காட்சி முன்பு தவம் கிடந்தேன்.

ஒருவாரம் போனது... பொறுத்து பார்த்த நான், மேலும் சில வாரங்கள் ஆகுமோ? என்ற அச்சத்தில் கல்லூரிக்கு சென்றேன். ஒரு வாரம் நிறைவடைந்து, அடுத்த வாரம் வந்தது. அதுவும் கடந்து அடுத்த மாதம் வந்தது, அடுத்த மாதமும் கடந்து அடுத்த வருடம் என்றானது. தற்பொழுது, கிரிக்கெட் வீரர் லாரா டெஸ்ட் கிரிக்கெட்டில் அடித்த 400 ரன்களையும் ஓவர்டேக் செய்து, 500 நாட்கள் என்ற இமாலய இடத்திற்கு தற்பொழுது வந்துள்ளது.

ஆனால் இன்னமும் இந்த புகார் குறித்து எந்த முடிவுவும் எட்டப்படவில்லை. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால், அரசை எதிர்த்து வாக்களித்த பன்னீர்செல்வம் மற்றும் பாண்டியராஜன் ஆகிய இருவரும் அமைச்சராகவே பொறுப்பேற்றுக் கொண்டனர். அவர்கள் பதவி ஏற்ற அன்று எனக்கு தூக்கம் கூட சரியாக வரவில்லை சபாநாயகர் அவர்களே! புகாருக்கு உள்ளானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நினைத்திருந்த எனக்கு, அவர்கள் அமைச்சர்களாக பதவியேற்றதால் ஏற்பட்ட அதிர்ச்சி என்னுடைய தூக்கத்துக்கு உலை வைத்தது.

என்ன என்று தெரியாமல் விழிபிதுங்கி நின்ற நான், ஒருநாள் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், நெறியாளர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது, "சபாநாயகரின் அதிகாரத்தில் யாரும் குறுக்கிட முடியாது என்றும், இத்தனை நாட்களில் அவர் ஒரு முடிவெடுக்க வேண்டும் என்று யாரும் வலியுறுத்தக் கூடாது என்றும், அதைவிட அதிர்ச்சியாக நீதிமன்றம் கூட அவரின் அதிகாரத்தில் தலையிட முடியாது" என்று அவர் கூறினார்.

குழப்பத்தில் இருந்த நான் இதன் மூலம் சில சந்தேகங்களில் இருந்து விடுபட்டாலும், அதன் நீட்சியாக மேலும் சில சந்தேகங்கள் வர தொடங்கியது. அந்த சந்தேகங்களை வேறு யாரிடமாவது தெரிந்து கொள்ளலாம் என்றால், உங்கள் அளவுக்கு யாருக்கும் 'விதி' தெரிந்திருக்குமா...? என்ற ஐயம் ஏற்பட்டதால் உங்களிடம் கேட்பதே சரியான முறை என்ற மனநிலைக்கு வந்துள்ளேன். 18 எம்.எல்.ஏக்கள் மீதான புகார் ஆகஸ்ட் மாதத்தில் வருகின்றது. அது குறித்து அந்த 18 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.

அவர்கள் முறையான விளக்கம் அளிக்காததால், அவர் உடனடியாக சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து பதவிநீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கிறீர்கள். ஆனால், அதற்கு 6 மாதங்களுக்கு முன்பாக பிப்ரவரி மாதம் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களித்தவர்கள் மீது கொடுக்கப்பட்ட புகார் மனு மீது இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

முதலில் கொடுத்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அடுத்து கொடுத்த மனு மீதான புகாரில் 18 பேரின் பதவியை, புகார் கொடுத்த 30 நாட்களுக்கு பறித்த உங்களுக்கு, 500 நாட்களுக்கு முன்பாக கொடுக்கப்பட்ட புகாரில் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற சந்தேகம் தான் என்னை வாட்டி வதைக்கிறது. உங்களை நடவடிக்கை எடுக்க யாரும் கட்டாயப்படுத்த கூடாது என்று அரசியலமைப்பு வழங்கிய அதிகாரத்தை யாரையும் விட நான் அதிகம் மதிக்கிறேன்.

ஆனால், புகாருக்குள்ளான 18 எம்.எல்.ஏக்களின் பதவியை 4 வாரத்துக்குள் 'பறிக்க' முடிந்த உங்களால், ஓபிஎஸ் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கொடுக்கப்பட்ட மனுவை விசாரணைக்கு 'எடுக்கவே' ஏன் தயங்குகிறீர்கள்? அவர்களின் பதவியை பறிக்க வேண்டும் என்று கூட நான் சொல்லவில்லை, அது என் விருப்பமும் அல்ல. அவர்களுக்கு எதிராக கொடுக்கப்பட்ட மனுவை, விசாரணைக்காவது எடுக்க வேண்டுமே என்ற ஆதங்கமே என்னை இங்கு புலம்ப வைத்துள்ளது.

இதற்கு முடிவே இல்லையா என்று பார்த்தால், எதிர்கட்சியினர் இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தை நாடினார்கள். அதுதொடர்பாக விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் சபாநாயகர் இதுவரை எந்த முடிவும் எடுக்காததால், தங்களால் இதில் தலையிட முடியாது என்றுகூறி, பந்தை சபாநாயகரை நோக்கி திருப்பிவிட்டார்கள். இத்தனை நாட்களுக்குள் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட, நீதிமன்றம் உங்களுக்கு எவ்விதமான ஆலோசனையும் வழங்கவில்லை. ஏனென்றால் அவர்களும் உங்களுக்கு வழங்கப்பட்ட 'வானளாவிய' அதிகாரத்தை அறிந்தவர்கள் தான்!

தற்பொழுது வழக்கு உச்சநீதிமன்றம் சென்றுள்ளது. வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு சில மாதங்களுக்கு முன்பே ஒத்திவைக்கப்பட்டது. இந்த தீர்ப்பு எப்போது வரும் என்றால், அது மில்லியன் டாலர் கேள்விதான். தீர்ப்பு வருவதற்குள் இந்த அரசின் ஐந்தாண்டு கால ஆட்சி என்பது, முழுமையாக நிறைவடைந்து கூட இருக்கலாம்!

நமக்கு தெரியாது, என்ன நடக்கும் என்று. ஒருவேளை உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பையே உச்சநீதிமன்றமும் கொடுக்கலாம், அல்லது எடியூரப்பா வழக்கில் வழங்கப்பட்டதை போல வேறு தீர்ப்புகள் கூட வரலாம் அல்லது சபாநாயகர் புகார் மனுக்கள் மீது இந்த கால கெடுவுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட, உத்தரவு பிறப்பிக்கப்பட வாய்ப்பிருக்கிறது...! அதை உச்சநீதிமன்றம் தான் முடிவு செய்யும்.

ஒருவேளை இந்த 11 பேரின் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியும் கட்சி தாவல் விதியின் கீழ் பறிபோகும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தால், அவர்கள் இத்தனை மாதங்களாக சட்ட விரோதமாகவே பேரவை உறுப்பினராகவும், அமைச்சராகவும், துணை முதல்வராக இருந்துள்ளனர் என்பது உறுதி செய்யப்படாதா...? அதற்கு நீங்கள் இடம் கொடுக்கலாமா? 18 எம்.எல்.ஏக்கள் புகாரில் 'புலி' பாய்ச்சல் பாய்ந்த நீங்கள், அதைவிட குறைவான 11 எம்.எல்.ஏக்கள் புகாரில் 'அமைதி' காப்பது எதனால் என்ற கேள்வி என்னை கடந்த 500 நாட்களாக வாட்டி வதைக்கிறது.

தயவு செய்து முடிவெடுங்கள் பேரவைத் தலைவர் அவர்களே...! விரைவில் அதை செய்வீர்கள் என்ற நம்பிக்கையோடு, விடைபெறுகிறான் இந்த சாமானியன்!

Intro:Body:

Common man letter to speaker Dhanbal

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.