ETV Bharat / state

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஆணையம் அமைப்பு - முதலமைச்சர் அறிவிப்பு

author img

By

Published : Dec 7, 2020, 12:23 PM IST

Updated : Dec 7, 2020, 3:21 PM IST

12:18 December 07

தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் ஆணையம் அமைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அறிக்கையில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளதாவது, 'தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளும், சமுதாய அமைப்புகளும் சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பல்வேறு காலகட்டங்களில் வைத்து வரும் கோரிக்கைகளின் அடிப்படையிலும், அரசின் பல்வேறு நலத்திட்ட பயன் அனைத்துப் பிரிவினருக்கும் சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டியும்,
உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 69 % இட ஒதுக்கீடு சம்பந்தமான வழக்குகளை எதிர்கொள்ளத் தேவையான புள்ளி விவரங்களை பெறுவதற்காகவும், தற்போதைய நிலவரப்படியான சாதி வாரியான புள்ளி விவரங்களைச் சேகரிக்கும் வழிமுறைகளை ஆராய்ந்தோம். அதன் அடிப்படையில் உரிய தரவுகளை சேகரித்து, அறிக்கை சமர்ப்பிக்க அதற்கென பிரத்யேக ஆணையம் ஒன்று அமைக்கப்படும் என கடந்த 1.12.2020அன்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
இந்த உத்தரவைத் தொடர்ந்து, தற்போதைய நிலவரப்படி, சாதிவாரியாக
அளவிடக்கூடிய முழுமையான புள்ளி விவரங்களை (Quantifiable data) சேகரிக்கும் வழிமுறைகளை முடிவு செய்து, அப்புள்ளி விவரங்களைத் திரட்டி அரசுக்கு அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் ஆணையம் அமைக்கப்படும்' என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். 

இந்த ஆணையம் உடனடியாக செயல்பாட்டுக்கு வருவதோடு விரைவில் அதன் பணியைத் தொடங்கும். இந்த அரசு சமூக நீதியை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கைகளையும்
தொடர்ந்து எடுக்கும்' என்று தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: வழக்கு தொடுத்தவரின் பின்னணியில் நான் இல்லை - துணைவேந்தர் சூரப்பா

Last Updated : Dec 7, 2020, 3:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.