சென்னை அம்பத்தூர்,வரதராஜபுரம் பழைய எம்.டி.எச் சாலை அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் ஸ்ரீதர். இவரது மகள் பத்மாவதி (18). இவர், அண்ணா நகரில் உள்ள தனியார் கல்லூரியில் இளஞ்கலை 2ஆம் ஆண்டு படித்து வந்தார்.
இதற்கிடையில் வருகின்ற 24ஆம் தேதி பத்மாவதிக்கு பருவத் தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில், அவர் படிக்காமல், ஃபோனில் விளையாடியுள்ளார். இதனைப் பார்த்த பெற்றோர் அவரைக் கண்டித்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த பத்மாவதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். இதனை பார்த்த பெற்றோர் அவரை மீட்டு அம்பத்தூரில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.
பின்னர், அவரை அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் பத்மாவதி வரும் வழியிலேயே இறந்ததாகத் தெரிவித்தனர். புகாரின் அடிப்படையில் அம்பத்தூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலாளராக நா.புகழேந்தி நியமனம்!