ETV Bharat / state

முதலாமாண்டு கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கின!

author img

By

Published : Oct 4, 2021, 12:40 PM IST

தமிழ்நாட்டில் இன்று முதல் முதலாமாண்டு கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கின.

first year students  college reopen  college reopen for first year  college reopen for first year students  college  students  கல்லூரி திறப்பு  முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லூரி திறப்பு  கலை அறிவியல் கல்லூரி  சென்னை செய்திகள்
கல்லூரி திறப்பு

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்று குறைந்துவருவதையடுத்து படிப்படியாகப் பல்வேறு தளர்வுகளைத் தமிழ்நாடு அரசு அறிவித்துவருகிறது. அந்த வகையில் கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதிமுதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கின.

இதனைத் தொடர்ந்து கலை, அறிவியல் கல்லூரிகள், பிற கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களைத் தவிர்த்து பிற மாணவர்களுக்கு சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்றுவருகின்றன.

பாதுகாப்பு வழிமுறைகள்

முதலாமாண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்பு

மேலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஏற்கனவே அட்மிஷன் நடைபெற்று முடிந்ததால், அவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்றுவந்தன. இந்நிலையில் அக்டோபர் 4 முதல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கலாம் என்று அரசு அறிவித்திருந்தது.

இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் இன்று (அக். 4) முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கின. அந்த வகையில் சென்னையில் இன்று முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.

இந்நிலையில் கல்லூரி நுழைவு வாசல் முன்பு அனைத்து மாணவர்களும் கைகளைச் சுத்தம் செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம் செய்திருந்தது. மேலும் கல்வி இயக்ககம் சார்பில் மாணவர்கள் கரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: முதலாமாண்டு மாணவர்களுக்கு இன்றுமுதல் நேரடி வகுப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.