ETV Bharat / state

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியின் அண்ணனுக்கு கத்திக்குத்து - முன்னால் காதலன் குடும்பத்துடன் கைது

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியின் வீடு புகுந்து தகராறில் ஈடுபட்டு இளைஞர் குடும்பத்துடன் கைது செய்யப்பட்டார்

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியின் அண்ணனுக்கு கத்திக்குத்து

author img

By

Published : Sep 2, 2022, 8:11 AM IST

சென்னை: அம்பத்தூர் கள்ளிகுப்பம் கங்கை நகர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி சென்னை அண்ணா நகரில் உள்ள மகளிர் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த மாணவியை அவருடைய சகோதரர் மனோஜ் குமாரின் நண்பர் மதியழகன் காதலித்து வந்துள்ளார்.

இதனை தெரிந்து கொண்ட மனோஜ், மதியழகனிடம் பேச வேண்டாம் என்று தனது தங்கைக்கு அறிவுரை கூறியுள்ளார். இதன்காரணமாக அந்தப் பெண் மூன்று மாதங்களாக மதியழகனுடம் பேசுவதை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த மதியழகன், தனது தாய், தந்தை உடன் மனோஜ் குமாரின் வீட்டிற்கு சென்று தகராறு செய்தார். அதுமட்டுமல்லால், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனோஜ் குமாரை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்றுள்ளனர். அதன்பின் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுதொடர்பாக மனோஜ் குமார் அளித்த புகாரின் பேரில், மதியழகன், அவரது தந்தை ராஜ்குமார், தாயார் நிறைமதி, உறவினர் ஹரி ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

இதையும் படிங்க: திருமணம் செய்ய பணம்கேட்ட பெண் - கடுப்பாகி திருமணத்தை நிறுத்தியவரின் வீட்டில் சென்று ரகளை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.