ETV Bharat / state

ஜிகா தொற்று பரவல்: சென்னை விமான நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு - ஆட்சியர் ஆய்வு

ஜிகா தொற்றுப் பரவல் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

ஆட்சியர் ஆய்வு
ஆட்சியர் ஆய்வு
author img

By

Published : Jul 13, 2021, 8:12 AM IST

சென்னை: தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் ஜிகா தொற்று என்ற ஒரு புதிய வகை தொற்று வேகமாகப் பரவி வருகிறது.

அந்த நோய் தமிழ்நாட்டில் பரவாமல் இருக்க தமிழ்நாடு சுகாதாரத் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

கேரளா மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் அனைத்து வாகனங்களையும் தமிழ்நாடு எல்கையில் நிறுத்திப் பயணிகளை தெர்மல் ஸ்கேனர்கள் மூலம் பரிசோதித்த பின்னரே அனுமதிக்கின்றனர்.

இந்நிலையில் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் அனைத்து ரயில் பயணிகளையும் தமிழ்நாடு ரயில் நிலையங்களில் தெர்மல் ஸ்கேனர்கள் மூலம் உடல் வெப்ப நிலையைப் பரிசோதிக்கத் தொடங்கியுள்ளனார்.

தொற்று தடுப்பு நடவடிக்கைகள்:

இதற்கிடையே கேரளா மாநிலத்திலிருந்து சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, கண்ணூா் ஆகிய விமான நிலையங்களிலிருந்து நாள் ஒன்றுக்கு ஏழு விமானங்கள் வருகின்றன.

அதில் தினமும் சுமார் 200ல் இருந்து 600 பயணிகள் வரை பயணம் செய்கின்றனர். கேரளாவிலிருந்து வரும் பயணிகளை பரிசோதிக்க தமிழ்நாடு சுகாதாரத் துறையினா் முடிவு செய்தனர்.

சென்னை விமான நிலையத்தில் பயணிகளை பரிசோதனை செய்யும் முறைகளை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் ஆய்வு செய்தார். அப்போது பரிசோதனை செய்யும் முறைகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். அவருடன் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் பிரியா ராஜ், விமான நிலைய அலுவலர்கள் இருந்தனர்.

விமானப் பயணிகள் சோதனை:

இதையடுத்து சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் வருகைப் பகுதிக்கு வரும் பயணிகளுக்கு தெர்மல் ஸ்கேனரில் உடல் வெப்பநிலையை பரிசோதித்த பின்பே வெளியே அனுப்புகின்றனர். அதற்காக செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத்துறை, வருவாய்த் துறையைச் சேர்ந்த 30 ஊழியர்களை பணிக்கு நியமித்துள்ளனர்.

கேரள மாநிலத்திலிருந்து வரும் விமானப் பயணிகள் மிகவும் கவனமாக பரிசோதிக்கப்படுகின்றனர். உடல் வெப்பநிலையில் சந்தேகம் ஏற்பட்டால் தமிழ்நாட்டில் எங்கு தங்குகின்றனர் என்ற விவரங்களைக் கேட்டறிந்த பின்பே வெளியே அனுப்புகின்றனர்.

தமிழ்நாடு சுகாதாரத்துறையிடம் இருந்து மறுஉத்தரவு வரும் வரை இந்த பரிசோதனை முறை தொடரும் என்று விமான நிலைய அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ஜிகா வைரஸ் முன்னெச்சரிக்கை... சோதனை சாவடிகளில் கண்காணிப்பு..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.