ETV Bharat / state

பள்ளிகளில் கரோனா பரவல் அதிகரிப்பு: முதன்மைக் கல்வி அலுவலர்கள் மாற்றம் - கோவை, தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பணி மாற்றம்

பள்ளிகளில் கரோனா தொற்று அதிகளவில் பரவியதையடுத்து, கோவை, தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

coimbatore thanjavur ceo tranferred due to higher covid strike

author img

By

Published : Apr 8, 2021, 1:01 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவல் சற்று குறைந்ததையடுத்து, கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி மெல்ல மெல்ல பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால், பள்ளிகள் திறக்கப்பட்ட சில தினங்களிலேயே மாணவர்கள் பலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது.

தமிழ்நாட்டில் குறிப்பாக, கோயம்புத்தூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் பயிலும் மாணவர்களுக்கு கரோனா தொற்று பரவல் அதிகரித்தது. இதன் காரணமாக இவ்விறு மாவட்டங்களின் முதன்மைக் கல்வி அலுவலர்களை மாற்றி பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கோயம்புத்தூர் முதன்மைக் கல்வி அலுவலராக செயல்பட்டுவரும் பி.உஷா தஞ்சாவூர் முதன்மைக் கல்வி அலுவலராகவும், தஞ்சாவூர் முதன்மைக் கல்வி அலுவலராக இருந்த ராமகிருஷ்ணன் கோயம்புத்தூர் முதன்மைக் கல்வி அலுவலராகவும் மாற்றப்பட்டுள்ளனர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.