கரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவை கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி மீண்டும் தொடங்கப்பட்டது. செப்டம்பரிலிருந்து நேற்று (நவ. 30) வரை 19.21 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர். செப்டம்பர் மாதத்தில் சென்னை மெட்ரோ ரயிலில் 3 லட்சத்து 60 ஆயிரத்து 193 பேர் பயணம் செய்துள்ளனர். அக்டோபர் மாதத்தில் மக்கள் பயன்பாடு கணிசமாக அதிகரித்து 7 லட்சத்து 3 ஆயிரத்து 223 பேர் பயணித்துள்ளனர்.
கடந்த மாதத்தில் இது மேலும் அதிகரித்து 8 லட்சத்து 58 ஆயிரத்து 546 பேர் பயணம் செய்துள்ளனர். நவம்பர் 23 ஆம் தேதி மட்டும் 38ஆயிரத்து 613 மக்கள் பயணம் செய்துள்ளனர். இந்த தரவுகள் மூலம், கரோனா பாதிப்புக்கு பின் மெட்ரோ ரயிலில் பயணிகள் எண்ணிக்கை உயர்ந்திருப்பது தெளிவாக தெரிய வருகிறது.
அண்மையில் தொடங்கப்பட்ட க்யுஆர் கோடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 21ஆயிரத்து 579 பயணிகளும், சென்னை மெட்ரோ பயண அட்டையைப் பயன்படுத்தி 4லட்சத்து 72ஆயிரத்து 27 பயணிகளும் சென்று வந்துள்ளர். சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளின் பாதுக்காப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுப்பது, விடுமுறை தினங்கள் மற்றும் கூட்டம் குறைவான நேரங்களில் பயணிகளுக்கு கட்டண சலுகை வழங்கப்படுவது ஆகியவற்றால் பயணிகளின் எண்ணிக்கை கணிசமான அளவுக்கு உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க...'விடியும் வா' - மக்கள் கருத்துகளுக்கு அழைப்பு விடுக்கும் ஸ்டாலின்