தமிழ்நாட்டில் கரோனா பரவலைத் தடுப்பதற்காகப் பல்வேறு நடவடிக்கைகள் அரசால் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அந்த வகையில் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும்விதமாக தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுவருகின்றன.
இது தவிர நடமாடும் மருத்துவ முகாம்கள் மூலமும் மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது. இந்நிலையில் இன்று (நவ. 14) தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் 8ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றுவருகிறது.
![cm stalin visit vaccination camp vaccination camp corona vaccine vaccine vaccine camp stalin inspect vaccination camp ma subramanaian inspect vaccination camp தடுப்பூசி முகாம் தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த ஸ்டாலின் மெகா தடுப்பூசி முகாம் மா சுப்ரமணியன் கரோனா தடுப்பூசி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13629666_stalin.png)
அதாவது தமிழ்நாடு முழுவதிலும் உள்ள சத்துணவு மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், பூங்காக்கள், ரயில் நிலையங்கள், பள்ளிகள் என சுமார் 50 ஆயிரம் இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் வில்லிவாக்கம் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட லாக்மா நகரில், தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த மு.க. ஸ்டாலின், முகாமை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, மக்களவை உறுப்பினர்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றி அழகன், மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
![cm stalin visit vaccination camp vaccination camp corona vaccine vaccine vaccine camp stalin inspect vaccination camp ma subramanaian inspect vaccination camp தடுப்பூசி முகாம் தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த ஸ்டாலின் மெகா தடுப்பூசி முகாம் மா சுப்ரமணியன் கரோனா தடுப்பூசி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13629666_st.png)
இதனைத் தொடர்ந்து தி.ரு.வி.க.நகர் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட சங்கர பக்தன் தெரு, கொன்னூர் நெடுஞ்சாலை ஆகிய இடங்களில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிவாரண பொருள்களை வழங்கினார்.
![cm stalin visit vaccination camp vaccination camp corona vaccine vaccine vaccine camp stalin inspect vaccination camp ma subramanaian inspect vaccination camp தடுப்பூசி முகாம் தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த ஸ்டாலின் மெகா தடுப்பூசி முகாம் மா சுப்ரமணியன் கரோனா தடுப்பூசி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13629666_ms.png)
இவரைத் தொடர்ந்து சென்னை கோடம்பாக்கம், அம்பேத்கர் நகர் பகுதிகளில் கரோனா மெகா தடுப்பூசி சிறப்பு முகாமினை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கிவைத்து, ஆய்வு செய்தார்.
![cm stalin visit vaccination camp vaccination camp corona vaccine vaccine vaccine camp stalin inspect vaccination camp ma subramanaian inspect vaccination camp தடுப்பூசி முகாம் தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த ஸ்டாலின் மெகா தடுப்பூசி முகாம் மா சுப்ரமணியன் கரோனா தடுப்பூசி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13629666_masu.jpeg)
பின்னர் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு நிவாரண பொருள்கள் வழங்கினார். இதில் சட்டப்பேரவை உறுப்பினர் பிரபாகர ராஜா, முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: கரோனா கட்டுப்பாடுகள் நீட்டிப்பு - ஸ்டாலின் அறிவிப்பு