ETV Bharat / state

செந்தில் பாலாஜி அமைச்சராகவே தொடர்வார் : ஆளுநருக்கு ஸ்டாலின் எழுதிய கடிதம் - TN Governor Puts hold on

செந்தில் பாலாஜியின் பதவி நீக்கம் குறித்து தமிழ்நாடு ஆளுநரின் கடிதம் கிடப்பில் இருக்கும் பட்சத்தில் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பதில் கடிதம் அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளாகியுள்ளது.

இலாகா இல்லாத அமைச்சராகவே செந்தில் பாலாஜி தொடர்வார் என முதல்வர் ஸ்டாலின் கடிதம்

author img

By

Published : Jun 30, 2023, 6:57 PM IST

Updated : Jun 30, 2023, 10:34 PM IST

ஆளுநருக்கு ஸ்டாலின் எழுதிய கடிதம்

சென்னை: 'இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார்' என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார். செந்தில்பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என குறிப்பிட்டு ஆளுநர் மாளிகைக்கு முதலமைச்சர் எழுதிய கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில்,“தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவி நீக்கி நேற்றிரவு அறிவித்தார். அதற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பின. இந்நிலையில், இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'இந்த விவகாரத்தை சட்டப்படி மேற்காெள்வோம்' என தெரிவித்து இருந்தார்.

இதனைத்தொடர்ந்து செந்தில் பாலாஜி அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டதை நிறுத்தி வைப்பதாக நேற்றிரவு 12 மணிக்கு ஆளுநர் அறிவித்தார். இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில், ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகள் மற்றும் அரசு சார்பாக மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவன், வில்சன், சண்முகசுந்தரம் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.

ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா: இது குறித்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் ரகுபதி ஆகியோர் செய்தியாளர்களிடம் இன்று (ஜூன் 30) பேசும்போது,“ஆளுநர் அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கம் செய்திருப்பதாக அறிவித்தார். முதலமைச்சர் ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்றார். நேற்று நள்ளிரவில் (Home Minister Amit Shah condemned Governor RN Ravi) உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆளுநரை அழைத்து கண்டித்துள்ளார். இதனைத்தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி நீக்கம் செய்த கடித்தத்தை நிறுத்தி வைத்திருப்பதாக (TN Governor Puts hold on Senthil Balaji's Dismissal order) தெரிவித்துள்ளார்.

செந்தில்பாலாஜி அமைச்சராக தொடர்வாரா?: சட்டப்படி ஒரு அமைச்சரை நியமிக்கவும், நீக்கம் செய்யவும் ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது. இந்த விவகாரம் தொடர்பாக, ஆளுநருக்கு விரிவான கடிதத்தை முதலமைச்சர் இன்று எழுத உள்ளார்” என தெரிவித்தனர். இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எழுதி அனுப்பிய கடிதத்தில், அமைச்சர் செந்தில்பாலாஜி அமைச்சராக தொடர்வார் என்றும், அவரை நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு சட்டப்படி கிடையாது என்றும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு ஆளுநர் மற்றும் முதலமைச்சரின் இந்த செயலால் தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது என அரசியல் விமர்சகர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களின் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

மேலும், செந்தில் பாலாஜியின் பதிவி நீக்கம் (Senthil Balaji dismiss) குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் தலையீடும் அதிகரித்துள்ளதால், பல்வேறு தரப்பு அரசியல் கட்சியினரிடமும், பொதுமக்களிடையும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. தமிழ்நாடு ஆளுநரின் கடிதம் கிடப்பில் இருக்கும் பட்சத்தில் தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த பதில் கடிதம் அரசியல் வட்டாரங்களில் மற்றொரு வீரியத்தை அதிகரித்துள்ளது.

செந்தில் பாலாஜி பதவி நீக்கம் குறித்த ஆளுநரின் கடிதத்திற்கு முதல்வரின் பதில் கடிதம்: மூத்த ஆலோசகர்களுடன் ஆலோசித்த பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு, செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராகவே தொடருவார் என பதில் கடிதத்தில் தெரிவித்துள்ளார். அதில் அவர், “29.06.2023 தேதி அன்று, உங்களது கடிதங்கள் ஒன்று இரவு 7.00 மணிக்கு எனக்கு கிடைத்தது. அதில் செந்தில் பாலாஜியை எனது அமைச்சரவையில் இருந்து "டிஸ்மிஸ் செய்வதாகக் அறிவித்து ஒரு கடிதமும், மற்றொன்று அதே நாளில் 11.45 மணிக்கு அவரைப் பதவியில் இருந்து "ஒதுக்காமல் வைத்திருத்தல்" என அடுத்தடுத்து இரு வேறு கடிதங்கள் பெறப்பட்டன. இந்த கடிதங்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட வேண்டிய கடிதங்கள் என்றாலும், இந்தப் பிரச்சினையில் உள்ள உண்மைகள் மற்றும் சட்டம் இரண்டையும் உங்களுக்கு தெளிவுபடுத்த நான் இதை எழுதுகிறேன்.

முன்னதாக செந்தில் பாலாஜியின் பதவி நீக்க கடிதம் குறித்து அமைச்சகத்தின் ஆலோசனை அல்லது கருத்துக்கள் கோரப்படவில்லை. இரண்டாவதாக, அரசியலமைப்பின் சீர்குழைவாகவும் அமைந்துள்ளது. மேலும் இது மறைமுகமான அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது. மீண்டும் சில நிமிடங்களிலேயே அனுப்பியக் கடிதத்தை திரும்ப பெற்றுதன் மூலம் முக்கியமான முடிவை எடுப்பதற்கு முன்பு நீங்கள் சட்டக் கருத்தைக் கூட எடுக்கவில்லை என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.

நான் மற்றும் அமைச்சர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். எங்களின் பின்னால் மக்களின் நம்பிக்கையும் ஆதரவும் வலுத்து இருக்கின்றன. அதனால் கவர்னர் போன்ற உயர் அரசியலமைப்பு அதிகாரிகள் கண்ணியத்துடன் செயல்பட வேண்டுமே தவிர்த்து அரசியலமைப்பின் சீர்குழைவிற்கு ஆதாரமற்ற அச்சுறுத்தல்களை நிலைநிறுத்த வேண்டாம்.

இதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜியின் பதவி குறித்து உங்கள் கவணத்திற்கு கொண்டு வரும் பட்சத்தில், (i) விசாரணையை எதிர்கொள்ளும் ஒரு நபருக்கும் அல்லது குற்றச்சாட்டுக்கு உள்ளான நபருக்கும் உள்ள வித்தியாசமும் முன்னதாக கட்டமைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஒரு நபர். லில்லி தாமஸ் வெர்சஸ் யூனியன் ஆஃப் இந்தியா, (2013) தொடரப்பட்ட 7 வழக்கில், மாண்புமிகு இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, மூன்றாவது வகை வழக்குகளில் மட்டுமே அமைச்சர் அல்லது சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுகிறார்.

அந்த வகையில் லில்லி தாமஸ் குறிப்பிடப்பட்ட வழக்கின் தீர்ப்பில் தொடர்புடைய முன்மாதிரியின் தொடர்புகளை தெளிவு படுத்துகிறேன். அதில், சட்டத்தின் 8-வது பிரிவின் துணைப் பிரிவுகள் (1), (2) மற்றும் (3) இல் குறிப்பிடப்பட்டுள்ள தகுதியின்மைகளில் நாடாளுமன்றம் அல்லது மாநில சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழக்கு இருக்கலாம். அதேச் சட்டத்தின் துணைப்பிரிவின் கீழ்(4) மூலம் காப்பாற்றப்பட வேண்டும்.

இந்தத் தீர்ப்பின் மூலம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று அறிவிக்கப்பட்டாலும் அவர் தண்டனைக்கு அல்லது தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு அல்லது திருத்தத்தை தாக்கல் செய்தாலும், குற்றம் நிரூபிக்கப்பட்ட பின்னரே தகுதியிழப்பு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று சட்டம் கூறுகிறது.

இந்நிலையில் இந்திய அரசியலமைப்புகளில் 164(1) வது பிரிவின் படி அமைச்சரவையில் அமைச்சராக நீடிக்கலாமா வேண்டாமா என்பதை முடிவெடுப்பதை பிரதமர் மற்றும் முதலமைச்சரின் முடிவுகளையே உறுதிபடுத்தியது இந்திய உச்ச நீதிமன்றம். அதன்படி செந்தில் பாலாஜி அமலாக்க துறையால் விசாரணைக்காக மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார், இதுவரை அவர் மீது குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, ஒரு துறை ஒரு அமைச்சர் அல்லது சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராக விசாரணையைத் தொடங்கியதால், அவர் அமைச்சராகத் தொடர சட்டரீதியாக இயலாமையாகி விடமாட்டார்.

மேலும், செந்தில்பாலாஜி குறித்து நீங்கள் ஐந்து பக்கத்திற்கு கடிதம் எழுதியுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் என்ற அரசின் கோரிக்கைக்கு, தொடர்ந்து மௌனம் காத்து வருகிறீர்கள் என்பதை சுட்டிக்காட்ட வேண்டியது எங்கள் கடமை. கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் நடந்த குற்றங்கள், குட்கா வழக்கில் சிபிஐ வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரியும் நீங்கள் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. அரசு சார்பில் சமர்பிக்கப்பட்ட எந்த குற்றங்களுக்கும் நடவடிக்கைகள் எடுக்காமல் இருக்கும் உங்களுடைய இந்த செயல்கள் உங்களின் உண்மையான இரட்டைத்தரம் கொண்ட நோக்கத்தை வெளிப்படுத்துகின்றன. ஆனால் இதனை ஏதும் பொருட்படுத்தாத தமிழ்நாடு அரசு எப்போதும் உங்களுக்கும் உங்கள் அலுவலகத்துக்கும் உரிய மரியாதையை அளித்து வருகிறது.

சட்டப்பிரிவு 164(1)ன் கீழ், முதல்வரின் ஆலோசனையின் பேரில்தான் ஆளுநர் அமைச்சர்களை நியமனம் மற்றும் பதவி நீக்கத்தில் ஈடுபடுகிறார். அமைச்சரவையில் யார் இருக்க வேண்டும், யார் இருக்கக்கூடாது என்பதை முடிவு செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை. அது முதலமைச்சரின் தனி உரிமை. அதைத் தொடர்ந்து சட்டப்பிரிவு 164(2)ன் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப் பேரவையில் அமைச்சர்களின் பொறுப்பு நீடித்துள்ளது.

இந்நிலையில் எனது அமைச்சரவையில், செந்தில் பாலாஜியின் பதவி நீக்கத்திற்கு உங்களுக்கு அதிகாரம் இல்லை என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சருக்கு மட்டுமே அந்த தனித்துவம் வாய்ந்த உரிமை உள்ளது. இதனால் முதல்வரின் ஆலோசனையின்றி அமைச்சரவையில் இருந்து அமைச்சரை பதவி நீக்கம் செய்த உங்கள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு தவறானது மற்றும் சட்டத்தில் இல்லாததால் இது புறக்கணிக்கப்படுகின்றது” எனக் கடிதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தன் கண்டனங்களைத தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: Senthil Balaji: செந்தில் பாலாஜியின் பதவி நீக்கம் நிறுத்தி வைப்பு - ஆளுநர் கடிதம்

Last Updated : Jun 30, 2023, 10:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.