ETV Bharat / state

திருவண்ணாமலை லாக் அப் டெத்: வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் - முதலமைச்சர் ஸ்டாலின் - Tiruvannamalai Lockup Death Chief Minister MK Stalin give explanation in Legislative Assembly

திருவண்ணாமலை மாவட்டம் காவல் நிலையத்தில் கைதி தங்கமணி உயிரிழந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்படுவதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

cm-stalin-says-tiruvannamalai-lockup-death-case-transferred-to-cbcid திருவண்ணாமலை லாக் அப் டெத்: வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் - முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம்

author img

By

Published : May 4, 2022, 12:27 PM IST

Updated : May 4, 2022, 1:27 PM IST

சென்னை: திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு காவல் நிலைய சரகம், தட்டரணை கிராமத்தை சேர்ந்த தங்கமணி மரணம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியால் (ஏப்ரல்.29) சட்டபேரவையில் தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

அதில் பேசிய அவர், "திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை அடுத்த தட்டரனை கிராமத்தில் வாழும் மலைவாழ் இனத்தைச் சேர்ந்த தங்கமணி என்பவர் சாராய விற்பனை வழக்கில் கடந்த ஏப்.26 அன்று விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, பின் மாவட்ட நீதிமன்ற உத்தரவுப்படி திருவண்ணாமலை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

அடுத்த நாளான ஏப். 27 அன்று காலை வலிப்பு வந்ததாகவும், மாலை இறந்துவிட்டதாகவும் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மர்மமான முறையில் இறந்த, மலைவாழ் வகுப்பைச் சேர்ந்த ஏழ்மை நிலையிலுள்ள தங்கமணியின் குடும்பத்திற்கு அரசு நிதியுதவி அளிக்க வேண்டும். இவ்வழக்கை நேர்மையான முறையில் விசாரணை நடத்திட உடனடியாக சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்" என தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின்
சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின்

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "தங்கமணி என்பவர் அவரது வீட்டில் விஷச்சாராயம் வைத்திருந்ததாக திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினர் கடந்த ஏப். 26ஆம் தேதி அன்று வழக்குப்பதிவு செய்து, அவரைக் கைது செய்து நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர் செய்துள்ளனர். அன்றைய தினமே திருவண்ணாமலை கிளைச் சிறையில் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினர்.

இந்த நிலையில், சிறையிலிருந்த தங்கமணிக்கு ஏப்ரல் 27 அன்று உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து, அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சுமார் இரவு 7.40 மணிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தங்கமணி சிகிச்சை பலனின்றி சுமார் இரவு 8.40 மணியளவில் உயிரிழந்தார். நீதித் துறை நடுவர் முன்னிலையில் உடற்கூராய்வு நடைபெற்றுள்ளது. அதன் அறிக்கை கிடைத்தவுடன் உரிய விசாரணை நடத்தப்பட்டு, இந்த அவைக்கு தெரிவிக்கப்படும்" என கூறினார்.

இந்தநிலையில், சட்டப்பேரவை 4 நாட்கள் விடுமுறைக்கு பின் இன்று (மே.4) மீண்டும் கூடியது. அப்போது, திருவண்ணாமலை விசாரணை கைதி தங்கமணி உயிரிழப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார்.

திருவண்ணாமலை லாக் அப் டெத்: வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் - முதலமைச்சர் ஸ்டாலின்

பேரவையில் பேசிய அவர், "கடந்த 29ஆம் தேதி திருவண்ணாமலை சம்பவம் தொடர்பாக, உடல் கூராய்வுக்கு பிறகு அறிக்கை தர உள்ளேன் என்று கூறியிருந்தேன் அதன்படி, திருவண்ணாமலை மாவட்டம் காவல் நிலையத்தில் கைதி தங்கமணி உயிரிழந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், திருவண்ணாமலை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் தங்கமணியை ஏப்ரல் 26ஆம் தேதி கைது செய்தனர். மேலும் தங்கமணியை கைது செய்த நாளில் இரவு அவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டு உயிரிழந்தார் என உடற்கூறு ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம்

இந்த சம்பவம் தொடர்பாக மதுவிலக்கு காவல்துறையினர் வேறு மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர் எனவும் இந்த வழக்கு தொடர்பாக நியாயமான முறையில் நீதி விசாரணை நடத்தப்படும் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கமளித்தார்.

இதையும் படிங்க: ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் லாக்-அப் மரணம் குறித்து விசாரிக்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Last Updated : May 4, 2022, 1:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.