ETV Bharat / state

'திட்டங்களின் நிலையை தினமும் கண்காணிப்பேன்' - முதலமைச்சர் அதிரடி - மானியக் கோரிக்கைகள்

துறை ரீதியாக செயல்படுத்தக்கூடிய திட்டங்களை,  தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் ஆன்லைன் தகவல் பலகை அமைக்கப்பட்டு எனது அறையில் திரை அமைத்து தினமும் கண்காணிப்பேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் அதிரடி
முதலமைச்சர் அதிரடி
author img

By

Published : Sep 16, 2021, 4:46 PM IST

சென்னை: மானியக் கோரிக்கைகளில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவது குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (செப்.16) அனைத்து துறை செயலர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது முதலமைச்சர் பேசியதாவது, "திட்டங்களை செயல்படுத்துவதில் துறை ரீதியான கூட்டங்களை கூட்டி செயலாளர்கள் முடிவெடுக்க வேண்டும். தேர்தலின்போது திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உறுதியாக உள்ளோம்.

6 மாதத்தில் செயல்படுத்த நடவடிக்கை

திட்டங்களை செயல்படுத்துவதில் எந்த பிரச்சினையும் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவித்த அறிவிப்புகளை ஆறு மாதங்களில் செயல்படுத்திட வேண்டும். திட்டங்களை செயல்படுத்துவதில் அமைச்சர்களை மட்டுமல்ல, அந்தந்தத் துறை சார்ந்த செயலாளர்களையும் கண்காணிப்பேன்.

ஆன்லைன் தகவல் பலகை

நம் பொருளாதாரத்திற்கு ஏற்ற வகையில் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். துறை ரீதியாக செயல்படுத்தக் கூடிய திட்டங்களை, நான் தெரிந்துகொள்ளும் விதமாக, தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலமாக ஆன்லைன் தகவல் பலகை (online dashboard) ஏற்படுத்தப்பட்டு, இதற்காக எனது அறையில் பெரிய திரை அமைக்கப்பட்டு, திட்டங்களின் நிலையை தினமும் கண்காணிப்பேன். இதனை மின் ஆளுமை துறை செயலாளர் ஒருங்கிணைப்பார் என்று கூறினார்.

அனைத்து துறை வளர்ச்சி, அனைத்து மாவட்டங்களின் வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி ஆகியவையே எண்ணமாக இருந்திட வேண்டும். அனைத்து துறைகளும் தனித்தனியாக இயங்காமல் ஒன்றுபட்டு இயங்க வேண்டும். இதன் மூலமாக திட்டங்கள் காலதாமதமின்றி மக்களுக்கு சென்றடையும்.

அடுத்த மாதம் ஆய்வு

துறை சார்ந்த செயலாளர்கள் தங்களுடைய துறை திட்டங்கள் மட்டுமன்றி, மற்ற துறையாக இருந்தாலும் கூட மக்களுக்கான திட்டங்களாக இருந்தால் செயல்பட வகை செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார். அடுத்த மாதம் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது குறித்து ஆய்வு செய்வேன்” இவ்வாறு அவர் பேசினார்.

இதையும் படிங்க: பிஇ, பிடெக் சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவு கலந்தாய்வு அட்டவணை வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.