ETV Bharat / state

வனம் மற்றும் வன உயிரின குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவுவை தொடங்கிவைத்தார் முதலமைச்சர்!

author img

By

Published : Aug 8, 2023, 10:33 PM IST

வன உயிரின குற்றங்கள் தொடர்பான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்படுத்துதல் வகையிலும் வனங்களை ஒட்டி வாழும் பகுதிகளில் உள்ள மக்களிடையே தகவல் கட்டமைப்பை மேம்படுத்த கட்டுப்பாட்டு பிரிவினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

வன உயிரினக் குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவு திறப்பு

சென்னை: சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பில் சென்னை, சைதாப்பேட்டை, பனகல் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரினக் குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவினை திறந்து வைத்து, அதற்கான இலச்சினையை வெளியிட்டார், தமிழக முதலமைச்சர்.

வனத்துறையின் 2021-22ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், மாநில அளவில் திட்டமிடப்பட்ட வன உயிரினக் குற்றங்களைக் கண்டறிந்து தடுக்க வனம் மற்றும் வன உயிரினக் குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவு ஏற்படுத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அறிவிப்பிற்கிணங்க, தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரின குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவு நிறுவப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் இன்று (ஆகஸ்ட் 8) அதற்கான கட்டுப்பாட்டுப் பிரிவினை திறந்து வைத்தார்.

திட்டமிட்ட வனம் மற்றும் வன உயிரின குற்றங்களைத் தடுக்கும் வகையில் பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்டுள்ள இந்தப் பிரிவு வன உயிரினக் குற்றங்கள் குறித்த தகவல் மற்றும் நுண்ணறிவு விவரங்களை சேகரித்தல், சட்டவிரோதமாக வன உயிரினங்கள் மற்றும் வன உயிரினப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுத்தல், உலகளாவிய அமைப்புகளுடன் ஒன்றிணைந்து செயல்படுதல் ஆகியவற்றை முக்கிய குறிக்கோள்களாக கொண்டு செயல்படவுள்ளது.

இதையும் படிங்க: "தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் எஸ்சி-எஸ்டி மாணவர்களிடம் வைப்புத்தொகை வசூலிக்க வேண்டாம்" - ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர்!

அதுமட்டுமில்லாமல் வன உயிரினக் குற்றங்கள் தொடர்பான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்படுத்துதல், வனங்களை ஓட்டி வாழும் பகுதிகளில் உள்ள மக்களிடையே தகவல் கட்டமைப்பை மேம்படுத்துதல், வன உயிரினக் குற்றங்கள் சார்ந்த தரவுகளை சேகரித்தல் மற்றும் வன உயிரினக் குற்றங்கள் அதிகமாக நிகழ்ந்துள்ள இடங்களை வரைபடமாக தயாரித்தல் ஆகியவை இப்பிரிவின் முக்கிய செயல்பாடுகளாக இருக்க வேண்டும் என்ற இலக்கும் நிர்ணயம் செய்யபட்டுள்ளது.

இப்பிரிவின் தலைமையகம் சென்னை, சைதாப்பேட்டை, பனகல் மாளிகையில் அமைக்கப்பட்டு, இயக்குநரை தலைவராகவும், சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் இராமநாதபுரம் ஆகிய நான்கு மண்டலங்களில் துணை இயக்குநர்களின் தலைமையிலும் செயல்படும் எனவும் இந்தப் பிரிவில் 118 முன்கள வனப்பணியாளர்கள் தற்போது பணியாற்றி வருகின்றனர்.

இப்பிரிவின் வாயிலாக 190க்கும் அதிகமான வன உயிரினக் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் யானை தந்தங்கள் மற்றும் யானைத் தந்தத்திலான பொருட்களை விற்பனை செய்தல், புலித்தோல் மற்றும் அதன் பாகங்களைச் சட்ட விரோதமாக விற்பனை செய்தல் மற்றும் சட்டவிரோதமாக பாம்புகள், கிளிகள், கடல் சங்குகள், கடல் அட்டைகள் ஆகியவை வைத்திருந்த குற்றங்கள் என 50க்கும் மேற்பட்ட வனக்குற்றங்களில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து வன உயிரினப் பொருட்கள் பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியின்போது வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு, இ.ஆ.ப, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் மற்றும் முதன்மை வன உயிரினக் காப்பாளர் ஸ்ரீனிவாச ஆர் ரெட்டி, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (பாதுகாப்பு, விழிப்புணர்வு மற்றும் தமிழ்நாடு வனம் மற்றும் வனஉயிரின குற்றக்கட்டுப்பாடு பிரிவு) ஆகாஷ் தீப் பருவா, வன உயிரின குற்றக்கட்டுப்பாட்டு பிரிவு இயக்குநர் இரா.காஞ்சனா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: NLC-யில் உழவர்களுக்கு துரோகம் செய்துவிட்டு கனடாவிற்கு உல்லாசப்பயணம் சென்றார் எம்.ஆர்.கே.பி - ஜி.கே. மணி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.