ETV Bharat / state

கரூர் வைஸ்யா வங்கி சார்பில் அவசரக்கால ஊர்திகள்: தொடங்கிவைத்த மு.க. ஸ்டாலின்

சென்னை: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கரூர் வைஸ்யா வங்கி வழங்கிய 10 புதிய அவசரகால ஊர்திகளின் சேவையைத் தொடங்கிவைத்தார்.

கரூர் வைஸ்யா வங்கி சார்பில் அவசரகால ஊர்திகள்

author img

By

Published : Jun 19, 2021, 2:20 PM IST

உயிர்காக்கும் ஊர்தி

கரோனா காலகட்டத்தில் மக்களுக்கு உதவிடும் வகையில் ஆம்புலன்ஸ் சேவை முக்கியப் பங்காற்றிவருகிறது. இந்தச் சேவையில் தற்போது வரை 1,303 ஊர்திகள் உள்ளன. இதனால் கோடிக்கான மக்கள் பயன் அடைந்துள்ளனர்.

புதிய அவசரகால ஊர்தி சேவையை முதலமைச்சர் தொடங்கிவைப்பு

கரூர் வைஸ்யா வங்கி சார்பில் அவசரகால ஊர்திகள்

இந்நிலையில் கரோனா காலகட்டத்தில் பொதுமக்களுக்கு உதவிடும் வகையில், கரூர் வைஸ்யா வங்கி, தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் 108 இலவச அவசரகால ஊர்தி சேவையைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வழங்கியது.

சேவையைத் தொடங்கிவைத்த முதலமைச்சர்

இதில் இரண்டு மேம்படுத்தப்பட்ட உயிர்காக்கும் அவசர கால ஊர்திகள், மலைவாழ் மக்களின் பயன்பாட்டிற்காக மலைப்பகுதியில் செல்லும் வகையில் எட்டு டிராக்ஸ் மாடல் அவசர கால ஊர்திகள் என 10 அவசர கால ஊர்திகளை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்வில் சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம், சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: 'ஓஎன்ஜிசிக்கு அனுமதி அளித்தால் சாகும்வரை போராடுவோம்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.