சென்னை: தமிழ்நாட்டில் கரோனா நிலவரம் மற்றும் தடுப்பூசிகள் விவரம் குறித்த ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உலக நாடுகளில் கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டு மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும், மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கண்காணிப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ‘மாவட்ட மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் கரோனா தடுப்பூசி முதல் தவணை செலுத்தாமல் உள்ள 50 லட்சம் நபர்களைக் கண்டறிந்து தடுப்பூசி முகாம்களை பயன்படுத்தி, தடுப்பூசி செலுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மாவட்டங்களில் 100 விழுக்காடு தடுப்பூசி செலுத்திய ஊராட்சிகளை கவுரவிக்க வேண்டும். இதன் மூலம் மற்ற ஊராட்சிகளை ஊக்குவிக்க முடியும்.
இதுவரை வல்லுநர்களால் கூறப்பட்ட கரோனா கட்டுப்பாட்டு முறைகளான கை கழுவுதல், முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றுதல்’ போன்றவற்றை மக்கள் பின்பற்ற நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் மற்றும் முக்கிய வல்லுநர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:சசிகலா மீது மரியாதை உள்ளது - ஓபிஎஸ் வாக்குமூலம்