தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு இரண்டாவது முறையாக நேற்று (ஜூலை 18) டெல்லி புறப்பட்டுச் சென்றார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். இதனையடுத்து இன்று (ஜூலை 19) மதியம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்துப் பேசினார்.
அச்சந்திப்பில், ஆகஸ்ட் 7ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தைச் சட்டப்பேரவையில் திறந்துவைக்கவும், சென்னையில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவும் சிறப்பு விருந்தினராக குடியரசுத் தலைவரை அழைத்துள்ளார்.
இந்நிலையில் டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜூலை 19) மாலை சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவரை அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், சேகர்பாபு, தா.மோ. அன்பரசன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இதையும் படிங்க: 'நிர்வாகிகள் நியமன தடை வழக்கை அபராதத்துடன் நிராகரிங்க' - எடப்பாடி பழனிசாமி