ETV Bharat / state

மாணவ செல்வங்கள் விபரீத முடிவுகளை எடுப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது - முதலமைச்சர் ட்வீட் - jothi sri durga suicide death

CM Request to Students
CM Request to Students
author img

By

Published : Sep 12, 2020, 2:24 PM IST

Updated : Sep 12, 2020, 3:45 PM IST

14:17 September 12

நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவி ஜோதி ஸ்ரீ துர்காவிற்கு இரங்கல் தெரிவித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ட்வீட் செய்துள்ளார்.

முதலமைச்சர் ட்வீட்
முதலமைச்சர் ட்வீட்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "மதுரை மாவட்டம், தமிழ்நாடு சிறப்பு காவல்படை வளாகத்திலுள்ள காவல் குடியிருப்பில் ஆறாம் அணியில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் முருகசுந்தரம் என்பவரது மகள் ஜோதி ஸ்ரீ துர்கா இன்று தற்கொலை செய்து கொண்டு இறந்தார் எனும் செய்தியை அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

இத்துயர சம்பவத்தில் உயிரிழந்த ஜோதி ஸ்ரீ துர்கா அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் மாணவ செல்வங்கள் இதுபோன்ற விபரீத முடிவுகளை எடுப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. 

வாழ்வில் வெற்றி பெற எண்ணிலடங்கா வழிகள் இருக்கும் நிலையில், மாணவச் செல்வங்கள் மன உறுதியையும், விடா முயற்சியையும் வளர்த்துக் கொண்டால் வெற்றி பெறுவது நிச்சயம்" என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:மதுரையில் நீட் தேர்வு பயத்தால் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை!

Last Updated : Sep 12, 2020, 3:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.